கம்மிங் சூன்.. “பூதம்” வருது! எடப்பாடியின் எடுபிடிகள் - 3 மணிகள், 2 விஜயபாஸ்கர்! திமுக வார்னிங்
சென்னை: டெண்டர் முறைகேடு, சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் நீதிமன்றத்தின் நிறுத்தப்படும் காலம் நெருங்கிக்கொண்டு இருப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தெரிவித்து உள்ளது.
அதில், "சில நாட்களுக்கு முன்னால் மகாயோகிப் போல பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார் முன்னாள் அமைச்சர் மணியான வேலுமணி. தி.மு.க. ஆட்சியை மக்கள் விரட்டத் தயாராகி விட்டார்களாம். இவரது எட்டாம் அறிவுக்கு எட்டிவிட்டது தன் மீதான வழக்குகளைப் பார்த்து மிரண்டு கிடக்கும் அவர் இப்படித்தானே பேட்டிகள் கொடுக்க முடியும் அவரது பிதற்றலுக்கு என்ன காரணம் என்பதை இரண்டு நாட்களுக்குப் பின்னர் மக்கள் அறிந்துகொண்டார்கள்.
"வேலுமணி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உறுதிப்படுத்திவிட்டது உயர்நீதிமன்றம் கூடுதல் ஆதாரங்கள் கிடைத்தால், டெண்டர் வழக்கையும் நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! திடீர் தில்! வருமான வரித்துறைக்கு எதிராக வரிந்துகட்டும் விஜயபாஸ்கர்!

நீதிமன்றம் சொன்னது என்ன?
புலன் விசாரணை அதிகாரி தனது பணிகளைத் தொடரலாம் என்றுதான் நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. கூடுதல் ஆதாரங்கள் கிடைத்தால் டெண்டர் வழக்கை நடத்தலாம்' என்று நீதிமன்றம் சொன்னதை, 'ரத்து' என்று செய்தி போட்டு சில பத்திரிக்கைகள் மகிழ்கின்றன. தங்களது விசுவாசத்தைக் காட்டுகின்றன. தீர்ப்பை முழுமையாகப் படிக்காமல் அந்தப் பக்கம் விசுவாசத்தை மட்டும் முழுமையாகக் காட்டுகிறார்கள் இவர்கள்.

தெளிவான முறைகேடு
டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீ க்காரமன் ஆகியோர் இது தொடர்பாக டெக்னிக்கள் ஆன கருத்துக்களையே சொல்லி இருக்கிறார்கள். வேலுமணி மீதான புகார்களைப் பார்க்கும்போது டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பது தெளிவாகத் தெரிவதாகவும், ஆனால் அமைச்சர் என்ற முறையில் டெண்டரை அவரே பரிசீலித்து முடிவெடுத்தார் என்பது புகார் செய்தவர்களின் தரப்பு வழக்காக இல்லை" என்றே நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

முகாந்திரம்
தரப்பட்ட புகார்களிலும் மாநகராட்சி தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர்கள்தான் டெண்டர் வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். முதல் தகவல் அறிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரையில், தற்போதைய நிலையில் விசாரிக்க உரிய முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் கூறவில்லை என்றும் சொல்லி இருக்கிறது நீதிமன்றம். வேலுமணிக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னணித் தலைவருக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் ஆளும்கட்சி வழக்குப்பதிவு செய்வது எளிதானது என்றாலும், குற்றச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். காவல்துறை அதிகாரத்தை ஒருசாராருக்கு ஆதரவாகப் பயன்படுத்தும்போது, நீதிமன்றத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர். மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்காமல், நேரடியாக ஏன் வழக்குப் பதிவு செய்திருக்கக் கூடாது எனவும் உத்தரவில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மிரண்டு கிடக்கும் வேலுமணி
தன் மீதான வழக்கு விசாரணையை பார்த்து மிரண்டு கிடக்கும் வேலுமணி.. கைகட்டி நிற்க போகும் அதிமுக கும்பல்! வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைக்கு முன்பே அரசிடம் அனுமதி பெற வேண்டுமெனவும். அவ்வாறு விசாரணை நடத்தும்போது வேலுமணி செல்வாக்கைச் செலுத்தி இருப்பது கண்டறியப்பட்டால் அவர்மீது வழக்குப் பதிவு செய்திருக்கலாம் என்றும், நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.

என்ன தீர்ப்பு?
அதேசமயம், வழக்கின் புலன் விசாரணை அதிகாரிதனது விசாரணையைத் தொடரலாம் என்றும், அதில் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டால், குற்றப்பத்திரிகையில் அவரைச் சேர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.