எல்லை மீறும் நெல்லை போலீஸ்! மனு கொடுக்க வந்தவர்களை தாக்கி அராஜகம்! இதெல்லாம் விஜய் கண்டுக்க மாட்டாரா!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில், காவல்துறையினர் மக்களின் உதவிக்காக முழுமையாக இணைந்து பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று திருநெல்வேலியில் நடந்திருக்கும் சம்பவம் காவல்துறையின் பெயருக்கு களங்கத்தை ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் பொறுப்பான முதல்வர் விஜய், ஏன் தலையிடவில்லை என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இன்றைக்கும் பிரச்சனை எனில் காவல் நிலையத்திற்கு போக மக்கள் தயங்குவது, காவல்துறை ஒரு சார்பாக நடந்துக்கொள்ளும் என்பதால்தான். தூய சக்தியின் ஆட்சியிலும் இதுதான் நடக்கிறது. உதாரணம் திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரி நடந்துக்கொண்ட விதம்.

Police

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, துறையூர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்திருக்கின்றனர். தூய சக்தி ஆட்சியில் குறையா? என்று அதிர்ச்சியடைந்த திருநெல்வேலி காவல்துறை உடனடியாக களத்தில் இறங்கியது. இறங்கி.. பாதிப்பை ஏற்படுத்திய தொழில்சாலைகளை அப்புறப்படுத்தியதா? என்று கேட்டால்.. அதுதான் கிடையாது.

புகார் அளிக்க வந்தவர்களை அப்புறப்படுத்த தொடங்கியது. புகார் அளித்தால்தானே குறை இருப்பது வெளியில் தெரியும்.. சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று, புகார் அளிக்க வந்த மக்களை தடுத்து நிறுத்தி காவல்துறை அதிகாரிகள் மிரட்டியிருக்கின்றனர். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை என்கிற நிலையில் இருக்கும் மக்களிடம் மிரட்டல், உருட்டல் எல்லாம் செல்லுபடி ஆகாது என்பதை போலீசார் அறிந்திருக்கவில்லை. மக்கள் விடாப்பிடியாக நிற்க.. தங்கள் பாணியில் டீல் செய்ய தொடங்கினர் போலீசார்.

கூட்டத்தை கலைக்கும் பணியில் மும்முரமாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் திடீரென வாயை பிதுக்கி, கண்களை உருட்டி.. தூய சக்தி ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க வந்த சமானிய மக்களில் ஒருவரை சப்பென அறைந்துவிட்டார். அவ்வளவுதான் மொத்தம் கூட்டமும் களைந்து போய்விடும் என மனக்கணக்கு போட்டார் போல.. ஆனால், கூட்டம் அப்படியே அந்த இன்ஸ்ப்பெக்டருக்கு எதிராக திரும்பிவிட்டது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

என்னதான் இருந்தாலும், கடமையே கண் என இருந்த அந்த பெண் காவல் ஆய்வாளரை மக்கள் கேள்வி கேட்டிருக்க கூடாது என நெட்டிசன்கள் சிலர் பரிதாபம் தெரிவிக்கின்றனர்.

கடந்த செப்.7ம் தேதியன்று, சட்டமன்றத்தில் 65 நிமிடங்கள் மூச்சு பிடித்து பேசிய முதலமைச்சர் விஜய், "குடிமக்கள் எவ்வளவு பாதுகாப்பாகவும், பயமில்லாமலும் வாழ்கிறார் என்பதில்தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது" என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். இன்னைக்கு நடந்த சம்பவத்தை வைத்து பார்க்கும்போது.. கேள்வி கேட்டால், மனு கொடுக்க போனால் சப்பென அறைவிழும் என்கிற பயம்தான் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும். அப்படியெனில் தமிழகம் முன்னேற்ற பாதையில்தான் செல்கிறதா? என்று முதலமைச்சரை பார்த்து பல்வேறு தரப்பினரும் கேட்க தொடங்கியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+