Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் இலவச வீட்டு மனை பட்டா.. பல்லடம் தாலுகா ஆபீஸில் யார்னு பாருங்க.. 2 நாட்களாக ஒரே சலசலப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள திட்டம்தான் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் (Free House Site Patta Scheme). இதன் மூலமாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மனை பட்டா வழங்கப்படுகிறது.. இந்நிலையில், நேற்றைய தினம் ஒரே நாளில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பட்டா கேட்டு பொதுமக்கள் சாலையில் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், பலரது கவனத்தை பெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில், இலவச வீட்டு மனை பட்டா கோரி தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கும் போராட்டம் நடைபெற்றது..

Tiruppur Patta Taluk Office

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன் மற்றும் தாலுகா செயலாளர் நாகராஜன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் திரண்டு மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், துணை தாசில்தாரிடம் மனு வழங்கினர்.

நிலம், வீட்டு மனைகள் இல்லை

இதையடுத்து, மாவட்ட தலைவர் விஜயராகவன் செய்தியாளர்களிடம் பேசும்போது "ஈரோடு தாலுகாவுக்கு உட்பட்ட எலவமலை, மேட்டு நாசுவம்பாளையம், பவானி தாலுகா லட்சுமி நகர், காலிங்கராயன் பாளையம், அந்தியூர் தாலுகா பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் விவசாய தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு வீடு, வீட்டு மனைகள் எதுவும் இல்லை. தினக்கூலிகளாக பணி செய்வதால், நிலம் வாங்கி வீடு கட்டும் அளவுக்கு வசதியும் கிடையாது..

எனவே, பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 240க்கும் மேற்பட்டோர் தனித்தனியாகவும், கூட்டாகவும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடமும் மனு வழங்கியுள்ளோம்... பிறகு தாசில்தாரிடம் மனு வழங்கியுள்ளோம். அதிகாரியும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையானது விரைவில் நடக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பல்லடம் தாலுகா ஆபீஸ்

அதேபோல, நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும் பட்டா வழங்கக்கோரி போராட்டம் நடந்தது.. ஒருகட்டத்தில் ஆவேசம் அடைந்த பெண்கள், சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

இதையடுத்து, பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி, பொதுமக்கள் பலர், பட்டா வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டு, பல்லடம் தாலுகா அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

இதனால் தாலுகா அலுவலகமே பரபரத்து விட்டது. உடனே விஷயத்தை கேள்விப்பட்ட துணை தாசில்தார் பிரகாஷ் ஓடோடி வந்து, "உங்களுடைய மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, உறுதியாக பட்டா வழங்கப்படும்" என்று உறுதி தந்தார்.. இதனால் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

பட்டா எப்போது கிடைக்கும்

2 நாளைக்கு முன்புகூட, பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, இதே பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.. ஆனால் இப்போது "நாங்கள்தான் உண்மையான பயனாளிகள், எங்களுக்குத்தான் பட்டா வழங்க வேண்டும்" என்று சொல்லி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டனர்.

வீடு, நிலம் எதுவுமே இல்லாமல் இப்படியே பல வருட காலமாக பட்டா கேட்டு வருகிறோம்... இன்று, நாளை என்று அதிகாரிகள் எங்களை அலைக்கழித்து கொண்டேயிருக்கிறார்கள்.. ஆனால், வசதி படைத்தவர்கள், வீடு உள்ளவர்கள் என பலருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தகுதியற்றவர்கள்

நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.. மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.. எங்களுக்கு பட்டா வழங்காமல் தகுதியில்லாதவர்களை தேர்வு செய்தது ஏன்?

முன்னாள் வார்டு உறுப்பினர், அவரது உறவினர்கள் பலருக்கும் பட்டா வழங்க முயற்சிப்பதாக தெரிகிறது.. ஆனால், நாங்கள் தான் உண்மையான பயனாளிகள்... இதுதொடர்பாக உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.. அந்த ஆய்வின் முடிவில், முறைப்படி பட்டா எங்களுக்குத்தான் வழங்க வேண்டும்.. தகுதியற்றவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்" என்று கொந்தளித்து கூறுகிறார்கள்.

உண்மையான பயனாளிகள் யார்?

இப்படி தொடர் போராட்டங்களால் பல்லடம் தாலுகா அலுவலகம் 2 நாட்களாகவே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.. 2 நாட்களுக்கு முன்பு பட்டா கேட்டவர்களும், 'நாங்களே உண்மையான பயனாளிகள் என்கிறார்களாம்.. நேற்று போராட்டம் நடத்தியவர்களும் நாங்கள்தான் உண்மையான பயனாளிகள் என்கிறார்களாம்.

தங்களுக்கு பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வீடு நிலம் இல்லாதவர்கள் பலரும் காத்திருக்கும்போது, சில உள்ளூர் அரசியல்வாதிகளின் துாண்டுதலால், வசதி உள்ளவர்களுக்கும் பட்டா வழங்கப்படுவதாகவும், இதனால் உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் வலம்வருவது, பல்லடத்தில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.

எனவே, சிறப்பு முகாம் நடத்தி, உண்மையான பயனாளிகளை கண்டறிந்து, பட்டா கிடைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்லடத்தில் முளைத்திருக்கின்றன...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+