சட்டசபை தேர்தல் 2021: விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் பங்கேற்றால் பரிசு நிச்சயம்
2021 தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி விழிப்புணர்வு வினாடி வினாப் போட்டிகளை தமிழகத்தில் இணைய வழியாக தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இணையவழி வினாடி வினா போட்டி நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரமாகும். முதல் நிலை மற்றும் அரை இறுதி போட்டிகளில் சரியான பதில் அளிப்போருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.
இதுகுறித்து சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதற்கான அறிவூட்டல் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பொது மக்களின் பங்கேற்பை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநில அளவிலான இணையவழி வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். அனைத்து சுற்றுகளும் 'கோல் குயிஸ் ஸ்போர்ட்ஸ்' என்ற யூ டியூப் இணையதளத்திலேயே நடத்தப்படும்.

முதல் நிலைப்போட்டி 3 சுற்றுகளை கொண்டது. முதல் சுற்று 25-ந்தேதி மாலை 4 மணிக்கும், 2-ம் சுற்று 26-ந்தேதி காலை 11 மணிக்கும், 3-ம் சுற்று அன்று மாலை 4 மணிக்கும் நடக்கும். இணையவழி தளத்திலேயே கருத்துகளை தெரிவிக்கும் பகுதியில் சரியான பதில்களை முதலில் பதிவிடும் நபரே அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க தகுதியானவர்.
ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பதிலை பதிவிட வேண்டும். மொத்தம் 36 குழுக்கள் அரை இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அரை இறுதி மற்றும் இறுதி சுற்றுகள் பின்வரும் வார இறுதியில் நடத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பு போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
தேர்தல் மற்றும் பொது அறிவு சார்ந்து வினாடி வினா போட்டிகள் நடைபெறும். ஓர் அணி அதிகபட்சம் 2 நபர்களை கொண்டதாக இருக்க வேண்டும். அனுமதி இலவசம்.
முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரமாகும். முதல் நிலை மற்றும் அரை இறுதி போட்டிகளில் சரியான பதில் அளிப்போருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications