யாரும் எந்திரிச்சு ஓட கூடாதுன்னு சொல்றதுக்கு.. விஜய் என்ன பெரிய.. விளாசிய நயினார் நாகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யாரும் எந்திருச்சு ஓட கூடாதுன்னு சொல்றதுக்கு இவரு என்ன பெரிய.. கையில் அருவா, கம்போடா வருகிறாரா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும், இப்படியெல்லாம் பேச இது சினிமாவா.. சினிமா ஸ்டூடியோவா.. ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. என பதில் அளித்துள்ளார்.

நேற்று முன் தினம் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. சினிமா டயலாக் இல்லாமல், ரீல்ஸ் வீடியோ மாதிரி பேசாமல், பதில் சொல்ல வேண்டும். 3 நாட்கள் டைம் எடுத்துக்கொண்டு கூட பேசுங்க" என்று கூறினார்.

Nainar Nagendran Vijay Udhayanidhi Stalin


இவரு என்ன பெரிய..

இதற்கு பதில் அளித்த முதல்வர் விஜய், உறுப்பினர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் திங்கட்கிழமை உறுதியாக பதில் அளிப்பேன். எதிர்க்கட்சிகள் யாரும் ஓடிட வேண்டாம்" என்று பதில் அளித்துவிட்டு சட்டசபையில் இருந்து கிளம்பி சென்றார். இதற்கு உடனே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எங்களை ஓடிட வேண்டாம் என சொல்லிவிட்டு அவரே ஓடிவிட்டார்" என்று கூறினார். திமுகவும் இதனை விமர்சனம் செய்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இவ்விவகாரத்தில் விஜய்யை விளாசியுள்ளார்.

யாரும் எந்திருச்சு ஓடிட வேண்டாம் என்று சொல்வதற்கு இவரு என்ன பெரிய.. கையில் கையில் அருவா, கம்போடு வருகிறாரா? இல்ல வெட்டுக் கத்தியோடு வருகிறாரா? ஏற்கனவே இப்படித்தான் சீவிட்டு இருக்கிறாரு.. (சட்டசபையில் விஜய் செய்த செய்கையை செய்து காண்பித்தார்).. சினிமாவா இது.. சினிமா ஸ்டூடியோவா இது.. ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.

எத பத்தி பேசப்போகிறார் எழுந்திருந்து ஓடுவதற்கு

என்னத்த பேசப் போகிறார்.. ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒன்னும் பேசுறது இல்லை. அவர் பேசவில்லை என்றால் சொல்ல வேண்டும். 400-க்கும் மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் நடந்திருக்கே.. அந்த கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து பதில் சொல்லனும். சின்ன குழந்தைகள் எவ்வளவு பேர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அத பத்தி பேசப்போகிறாரா?.. இல்ல கோவையில் நடந்த படுகொலை மாதிரி தொடர்ந்து கொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது. அத பத்தி பேசப் போகிறாரா? எத பத்தி பேசப்போகிறார் எழுந்திருந்து ஓடுவதற்கு..

அவர் சட்டமன்றத்தில் மக்களுக்கு தேவையான 2,500 கொடுப்போம் என தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அத கொடுக்கனும், அத பத்தி பேசனும். இந்த மாதிரி சினிமாவில் வருகிறது போல் பேசக்கூடாது" என்றார். அப்போது செய்தியாளர்கள் விஜய் பிரதமர் வேட்பாளர் என்று கேட்ட கேள்விக்கு, "இது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது. வேடிக்கையான கேள்வி.." என்று பதில் அளித்தார்.

மின் கட்டணம் உயர்வு

மேலும் நயினார் நாகேந்திரன் கூறுகையில், நிச்சயமாக தமிழ்நாட்டில் தமிழ் தான் இருக்க வேண்டும். அதற்கு எங்கள் பாஜக ஆதரவு தான். ஆதரவு தெரிவித்துக் கொள்கிறோம். இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். தூய்மை பணியாளர்கள் பொறுத்தவரை எல்லா சங்கத்தையும் கூப்பிட்டு பேச வேண்டும். ஒரு குறிப்பிட்ட சங்கத்தை மட்டும் கூப்பிட்டு பேசக்கூடாது. தேர்தல் நேரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு முழுவதுமாக கொடுப்பேன் என்று சொன்னார். எல்லா சங்கங்களையும் அழைத்து பேசினால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

விவசாயிகளுக்கு இன்னும் எங்கையும் முழுதாக கடனை தள்ளுபடி பண்ணல.. விவசாயிகளுக்கு முழுதாக கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேட்டூர் அணை கட்டும் போது மொத்தமே ரூ.4.5 கோடி தான் செலவு ஆகியது. ஆனால் இப்போது முதல்வர் போவதற்கு, பாதுகாப்புக்கு மட்டுமே 5 கோடி ரூபாய் செலவு பண்ண வேண்டியிருக்கு.. இதுமட்டுமல்ல இப்போது எல்லா வீடுகளிலும் அளவுக்கு அதிகமான மின் கட்டணம் வருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் இதை கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+