Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்களுக்கு என்ன செய்யனும் சொல்லுங்க.. சிறு, குறு தொழிலதிபர்களிடம் கேட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 13ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்க உள்ள நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் நிதிதுறை அமைச்சரும் ஊரக தொழில்துறை அமைச்சரும் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

வரும் 13ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்க உள்ள நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரசு உதவி

அரசு உதவி

இதில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தற்போது பிரச்சனைகள் என்ன உள்ளது, அரசு என்ன உதவிகள் செய்ய வேண்டும், கூடுதலாக தொழிலை பெருக்குவதற்கான முயற்சியில் ஈடுபட அரசின் வளர்ச்சி நிதி ஒதுக்கீடு எப்படி இருத்தல் வேண்டுமென ஆலோசனை செய்யபட்டு வருகிறது.

அமைச்சர்கள் பேச்சு

அமைச்சர்கள் பேச்சு

அப்போது பட்ஜெட்டிற்கு முன்பே தொழில் முனைவோரின் பிரச்சனைகளை தீர்க்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் பேசினார். மேலும் புதிய தொழில் நுட்பம், சிறுகுறு தொழிலில் நவீன யுக்திகள் கையாள வேண்டும், கூடுதலாக தொழிலை வளர்ச்சி செய்வதில் உள்ள சிக்கல்களை விரைந்து களைய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

தொழில்துறை மேம்பாடு

தொழில்துறை மேம்பாடு

கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்கள் நலிவடைந்து உள்ளன. தொழிலாளர் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் மூலப்பொருட்கள் விலை ஏற்றம் என பல்வேறு பிரச்சனைகளை தொழில்துறை சமூகம் சந்தித்து வருகிறது.

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

இந்த நிலையில் தான் தமிழக அரசு பட்ஜெட்டில் இதற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு அவர்கள் வாழ்க்கை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்கள் நசிவடையாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நிபுணர் குழு

நிபுணர் குழு

தமிழக அரசு, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி உள்ளது. அந்த குழு இப்போதைய சவாலான சூழ்நிலையிலிருந்து தமிழ் நாட்டை மீட்டு வழி நடத்துவதற்கு நிதித் துறை அமைச்சகத்துக்கு உரிய யோசனைகளை வழங்கி வருகிறது. அது இந்த பட்ஜெட்டில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய பட்ஜெட்

விவசாய பட்ஜெட்

தமிழகத்தில் முதல்முறையாக இந்த வருடம் வேளாண்மைத் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2021-2022 நிதியாண்டுக்கான, பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யும் நிலையில், அதற்கு அடுத்த நாள் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கையில் இதற்கான உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, கடந்த ஜூன் 21ம் தேதி, சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் அதை உறுதி செய்தார். அதன்பிறகு, விவசாயிகளின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+