பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் வெற்றி மடிக்கணினி வரை.. பட்ஜெட்டின் டாப் அறிவிப்புகள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு பல்வேறு பிரம்மாண்டமான திட்டங்களை அறிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி, விளையாட்டுத் துறை மேம்பாடு மற்றும் உயர்கல்வி சீரமைப்பு என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

TN Budget 2026 8g Gold amp amp Silk Saree for Marriage Vetri Laptops AI Curriculum

அண்ணன் சீராக 8 கிராம் தங்க நாணயம் & பட்டுப்புடவை

இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கிய மகிழ்ச்சியான தருணம். பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதி, அவர்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை அண்ணன் சீராக'நமது அரசு வழங்கவுள்ளது என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

கல்வி மற்றும் டிஜிட்டல் புரட்சி

டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப தமிழகத்தை அதிநவீன மாநிலமாக உருவாக்கும் இலக்கின் கீழ், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித் துறை: ஒட்டுமொத்தமாக ரூ.44,527 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வித் துறை: ரூ.8,393 கோடி ஒதுக்கீடு. வெற்றி மடிக்கணினி திட்டம்: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை உயர்த்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

AI பாடத்திட்டம்: உலகத் தரத்திலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் அடங்கிய 'நிபுணர் குழு' அமைக்கப்படும். பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI திறன் பயிற்சி அளிக்கப்படும்.

தொழிற்பயிற்சி நிலையங்கள்: ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) நிறுவப்படும்.

சிறப்பு அரசு சட்டக்கல்லூரி: சட்டக் கல்வியை மேம்படுத்த புதிய சிறப்பு அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.

பள்ளிகளின் தூய்மையை உறுதிசெய்ய 10,000 பள்ளிகளில் 'சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். "நமது ஆட்சியில் 'சூப்பர் சேஃப், சூப்பர் ஸ்கூல்' சூழல் உறுதியளிக்கப்படுகிறது" என நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாடு

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வருகிறது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசைத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனப் பேரவையில் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டுத் துறைக்கு மாபெரும் ஊக்கம்

தமிழக இளைஞர்களின் விளையாட்டுத் திறனை உலகளவில் கொண்டு சேர்க்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்: மாநிலம் முழுவதும் ரூ.50 கோடி செலவில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

கிராமிய விளையாட்டுகள்: நமது பாரம்பரிய கிராமிய விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்த ரூ.42 கோடி ஒதுக்கீடு.

தினசரி விளையாட்டுப் பயிற்சி: பள்ளி நேரத்திற்குப் பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்ட விளையாட்டுப் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

வீரர்களுக்கு உதவித் தொகை: விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்கக் கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக நீதி & போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை

சமூக நீதித் துறைக்கு ரூ.3,937 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.300 கோடி பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், போதைப்பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் புழக்கம் குறித்து உடனடியாக புகார் அளிக்க பிரத்யேக மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்ற முக்கியமான அறிவிப்பையும் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+