சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு- அமைச்சரவை கூட்டம் முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் ஆகஸ்ட் 13-ந் தேதி தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்! இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!

அத்துடன் தமிழகத்தின் நிதி நிலவரம் தொடர்பான வெள்ளை அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த வெள்ளை அறிக்கையை வரும் 9-ந் தேதி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார். இந்த நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான சட்ட முன்வடிவு வரும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

7.5% இட ஒதுக்கீடு

7.5% இட ஒதுக்கீடு

இதனையடுத்து பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இது கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

நீட் தேர்வால் தற்கொலைகள்

நீட் தேர்வால் தற்கொலைகள்

மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வானது சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்கள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களால் நீட் நுழைவுத் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் அரியலூர் அனிதா உள்ளிட்ட கிராமப்புற மாணவர்கள், மருத்துவ கனவு பாழாகிப் போனதால் தற்கொலை செய்து கொண்ட துயரமும் நிகழ்ந்தது.

இடஒதுக்கீடு ஏன்?

இடஒதுக்கீடு ஏன்?

நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கைவிடப் போவதில்லை என்பதில் திட்டவட்டமாக இருந்து வருகிறது. தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் நீட் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சமூக நீதிக்கு முரணானது; இதனை கருத்தில் கொண்டே மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. முன்னதாக இதற்காக நீதிபதி கலையரசன் கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10%க்கும் குறையாமல் உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்திருந்தது.

ஆளுநர் இழுத்தடிப்பு

ஆளுநர் இழுத்தடிப்பு

இதற்கான மசோதாவும் தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தார். இதனையடுத்து ஆளுநருக்கு நெருக்கடி தரும் வகையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போது போராட்டம் நடத்தின. அதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.

அரசாணை சொல்வது என்ன?

அரசாணை சொல்வது என்ன?

இதனையடுத்து தமக்கு சில வாரங்கள் அவகாசம் கேட்டிருந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். பெரும் இழுபறிக்குப் பின்னர் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கினார். இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் பலரும் பெரும் பயனடைந்தனர். தமிழக அரசின் அப்போதைய அரசாணையானது, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழக அரசு பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும் என விளக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு பள்ளிகள் வரையறை

அரசு பள்ளிகள் வரையறை


மேலும் பஞ்சாயத்து பள்ளிகள், ஆரம்ப, நடுநிலை, மேல்நிலை பள்ளிகள், முனிசிபல், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள் உள்ளிட்டவை அரசுப் பள்ளிக்கூடங்களாகக் கருதப்படும் எனவும் வகைப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் பின்தங்கியவர்களாக இருந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழே தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்புவரை படித்தவர்களும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகக் கருதப்படுவார்கள் எனவும் தமிழக அரசின் அந்த அரசாணை விளக்கி இருந்தது. தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் இருக்கின்றன. அப்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு வழங்கப்பட்டதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுமார் 300 இடங்கள் கிடைத்தன. இது கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இதனையடுத்தே தற்போது பொறியியல், வேளாண்மை, சட்டம், மீன்வளம் என தொழில் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும் 7.5% இடஒதுக்கீடு வழங்க தற்போது தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தொழில் கல்வி இடஒதுக்கீட்டுக்கு காரணம்?

தொழில் கல்வி இடஒதுக்கீட்டுக்கு காரணம்?

இன்றைய அமைச்சரவை கூட்டத் தீர்மானம் விவரம்: கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்கு தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்யவும் அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்தவும் உரிய பரிந்துரைகளை செய்ய ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் அறிக்கையும் பெறப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5% ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Cabinet meeting approved 7.5% reservation for government school students in vocational courses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X