சென்னையில் மழை.. பணிகள் துரிதமாக நடக்கிறதா?. பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் விசிட்
சென்னை: சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழை பாதிப்பின் சுவடே இன்னும் அழியாத நிலையில் சென்னைவாசிகளை விடாது கருப்பு என்பதுபோல் மழை துரத்தி வருகிறது. சென்னையின் நகர், புறநகர் பகுதிகளில் 8 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்தெடுத்தது.
Recommended Video
கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம் என நகரின் முக்கியமான பகுதிகளிலும், ஆவடி, அம்பத்தூர் என புறநகர் பகுதியிலும் மழை தொடர்ந்து கொட்டியது.

மழையில் சிக்கி திண்டாடும் சென்னை
இதனால் சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியுள்ளது. சென்னை சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில் வீடுகளின் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. வெள்ளம் சூழ்ந்து விட்டதால் பல்வேறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

நிலைமை மோசம்
சென்னையில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஒட்டுமொத்த சென்னையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் பல கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சென்னை மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொல்லும் அளவுக்கு சென்னையின் நிலைமை மோசமாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
சென்னையில் சாலைகளில், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு நிலவரம், மழைநீரை அகற்றும் பணி குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பணிகளை முடுக்கி விட்டார்
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மக்கள் அளித்த புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும், மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழைநீர் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடுக்கி விடும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications