Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7,454 வேட்புமனு.. பல கோடி சொத்து.. தமிழ்நாட்டிலேயே பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா? அட இவங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பணக்கார வேட்பாளர் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே 'தகிதகி' என தகிக்க தொடங்கிவிட்டது. வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அரசியல் கட்சிகளை மட்டுமன்றி, சாமானியர்களையும் புருவம் உயர்த்த வைத்திருக்கின்றன.

tamil nadu assembly elections 2026 Vijay

குவிந்த மனுக்கள்: சென்னையின் 'ஸ்பெஷல்' நிலவரம்!

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் போட்டியிட மொத்தம் 7,454 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தலைநகர் சென்னையில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாள். அன்று மாலைக்குள் யார் யார் இறுதிப் போட்டியில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

கவனத்தை ஈர்க்கும் லால்குடி: களமிறங்கும் லீமாரோஸ் மார்ட்டின்!

இந்தத் தேர்தலின் 'ஹாட் ஸ்பாட்' ஆக மாறியிருக்கிறது லால்குடி தொகுதி. காரணம், 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் மார்ட்டின் அதிமுக வேட்பாளராக இங்கே களம் காண்கிறார்.திருச்சி மாவட்டத்தின் 'லால் குடி' தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் லீமா ரோஸ், தற்போது தமிழக தேர்தல் களத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். லாட்டரி தொழிலில் கொடிகட்டிப் பறந்த சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி என்ற அடையாளத்தோடு, 'தமிழகத்தின் பெரும் கோடீஸ்வர வேட்பாளர்' என்ற புதிய மகுடத்தையும் அவர் சூடியிருக்கிறார். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் லீமா ரோஸ் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. அவரது பெயரில் மட்டுமே 139.62 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 909.94 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுக்கு அதிபதியாக, மற்ற வேட்பாளர்களை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் இருக்கிறார் லீமா ரோஸ்.

சொத்துக்கணக்கு இதோடு முடிந்துவிடவில்லை; குடும்பத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் கணக்கிட்டால் அந்தத் தொகை 5,000 கோடியைத் தாண்டி மலைக்க வைக்கிறது. லீமா ரோஸின் கணவர் சாண்டியாகோ மார்ட்டின் பெயரில் 3,262.01 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 887.36 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. அதேபோல் இவர்களது மகன் ஜோஸ் டைசன் மார்ட்டின் பெயரிலும் 664 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகள் இருப்பது பிரமாணப் பத்திரத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலின் போது அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் மற்றும் வருமானக் கணக்குகள் தான் இப்போது சமூக வலைதளங்களின் பேசுபொருள்.

2024-25 நிதியாண்டின் வருமான விவரம்:

லீமாரோஸ் மார்ட்டின்: ₹9.82 கோடி

கணவர் சாண்டியாகோ மார்ட்டின்: ₹11.39 கோடி

மகன் ஜோஸ் டைசன் மார்ட்டின்: ₹19.56 கோடி

கோடிகள் புரளும் இந்த வருமானக் கணக்குகளுடன் லீமாரோஸ் களம் இறங்கியிருப்பது, லால்குடி தொகுதியை விஐபி தொகுதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. சுயேச்சைகளின் வருகை, பிரதான கட்சிகளின் வியூகம் என ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகு தேர்தல் களம் இன்னும் சுவாரஸ்யமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் vs ஸ்டாலின்

தமிழக அரசியல் களம் இப்போது அனல் பறக்கிறது. ஒரு பக்கம் அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட 'திராவிட ஸ்டாக்' முதல்வர் மு.க.ஸ்டாலின். மறுபக்கம், 'வெற்றி வாகை சூட' ஆசையாக கிளம்பியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட இவர்களது சொத்து விவரங்களைப் பார்த்தால், சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையிலான அந்தப் பெரிய 'பொருளாதார இடைவெளி' பளிச்செனத் தெரிகிறது.

இது 'அசையும்' சொத்துகளுக்கும் 'அசையாத' நம்பிக்கைகளுக்கும் இடையிலான ஒரு சுவாரஸ்ய யுத்தம்!

யார் வசம் எவ்வளவு? - ஒரு நேரடி ஒப்பீடு

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இதோ சில முக்கியத் தகவல்கள்:

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்:

அசையும் சொத்து: ஸ்டாலின் பெயரில் ரூ.3.30 கோடி உள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.

அசையா சொத்து: ஸ்டாலின் பெயரில் ரூ.2.96 கோடியும், துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.2.10 கோடியும் அசையா சொத்துகளாகக் காட்டப்பட்டுள்ளன.

வாகனங்கள்: ஆச்சரியமாக, தமிழக முதல்வரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை! 'கார் இல்லாத முதல்வர்' என்ற டேக் அவருக்கே உரித்தானது.

நகைகள்: ஸ்டாலின் பெயரில் தங்கம் அல்லது வெள்ளி நகைகள் எதுவும் இல்லை. துர்கா ஸ்டாலினிடம் 720 கிராம் பழைய தங்க நகைகள் (மதிப்பு ரூ.84 லட்சம்) உள்ளன.

ஆண்டு வருமானம்: கடந்த ஆண்டில் ஸ்டாலினின் மொத்த வருமானம் ரூ.31 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்:

அசையும் சொத்து: விஜய்யின் பெயரில் மட்டும் ரூ.404.58 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. இது ஸ்டாலினை விட பல மடங்கு அதிகம்.

அசையா சொத்து: நிலம், கட்டிடங்கள் என ரூ.115.14 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் விஜய்யிடம் உள்ளன.

மொத்த சொத்து மதிப்பு: விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.519.72 கோடி. அரசியலுக்கு வரும் முன்னரே 'பாக்ஸ் ஆபீஸ்' மன்னனாக இருந்ததற்கான அத்தாட்சி இது.

குடும்பக் கடன்: ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், விஜய்யின் மனைவி, தந்தை, தாய் மற்றும் பிள்ளைகள் என அனைவரும் விஜய்யிடமே கடன் வாங்கியுள்ளதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. (மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி கடன்!)

நகைகள்: விஜய்யிடம் 883 கிராம் தங்கம் உள்ளது. அவரது மனைவி சங்கீதாவிடம் 3 கிலோ தங்க நகைகளும், ரூ.1 கோடி மதிப்பிலான வைர நகைகளும் உள்ளன.

வருமானம்: 2021-22 நிதியாண்டில் மட்டும் விஜய் ரூ.237.46 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

யார் பெரிய கோடீஸ்வரர்?

எண்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தான் அசுர பலத்துடன் முன்னிலையில் இருக்கிறார். விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு (ரூ. 519.72 கோடி), முதல்வர் ஸ்டாலினின் மொத்த குடும்பச் சொத்து மதிப்பை (சுமார் ரூ. 9.68 கோடி) விட ஏறத்தாழ 50 மடங்கு அதிகம்.

திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த விஜய், ஈட்டிய வருமானத்தை கணக்கு காட்டியுள்ளார். அதேசமயம், ஸ்டாலின் தனது பல ஆண்டுகால அரசியல் பயணத்தில் ஒரு நிதானமான சொத்து வளர்ச்சியையே காட்டியிருக்கிறார்.

விஜய்யிடம் காஸ்ட்லி கார்கள் இருந்தாலும், வேட்புமனுவில் ரூ.67,000 மதிப்பிலான TVS XL வண்டியைச் சேர்த்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மறுபுறம், சொந்தமாக காரே இல்லாத முதல்வர் என ஸ்டாலின் தனது சிம்பிளிசிட்டியைப் பதிவு செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+