'தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்'.. இ.கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு.. முழு விவரம்!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிச்சையாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு கூட்டங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன் கூறியதாவது:- தோழமை கட்சியாக இருந்தாலும் தமிழக அரசு தவறு செய்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது. கூட்டணியை முறித்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

அரசாணை இல்லை
தமிழகத்தில் அதிக அளவு பெய்த பருவமழை காரணமாக அதிக பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது இதனை தமிழக அமைச்சர்கள் மட்டுமல்லாது மத்திய குழுவும் ஆய்வு செய்துள்ளது. ஆனால் அந்த குழு என்ன அறிக்கை அளித்துள்ளது என்று இதுவரை வெளியிடப்படவில்லை மேலும் மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை
தமிழக அரசு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது ஆனால் அரசாணை எதுவும் தெரிவிக்கப்படவில்லை நிவாரணம் வழங்கவில்லை.

ஆளுநர்கள் செயல்பாடு
தமிழக அரசு அறிவித்த இழப்பீடு தொகை என்பது விவசாயிகளுக்கு குறைவான இருக்கும் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் தவிர மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.

கண்டிக்கத்தக்கது
தமிழகத்தில் ஒப்பந்தங்களில் 60 சதவீதம் கமிஷன் ஆகவும் 40 சதவீத பணிகள் தான் நடைபெற்று வருகிறது அதுவும் பணிகள் நடப்பதற்கு முன்பாகவே கமிஷன் தொகை முன்கூட்டியே வாங்கப்படுகிறது. இது எல்லா ஆட்சிகளிலும் தொடர்கிறது. மத்திய அரசு கூட்டங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து கண்டிக்கத்தக்கது.

தொலைநோக்குத் திட்டம் எங்கே?
தன்னிச்சையாக செயல்படக் கூடிய தேர்தல் ஆணையம் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் மறைமுகமாக கொண்டுவரப்பட்டு விட்டது. தமிழகத்தில் தொலைநோக்குத் திட்டம் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை வரும் கூட்டத்தொடரில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications