சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஞாயிறு ஊரடங்கு எப்போது வாபஸ் பெறப்படும்.. மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறிய முக்கிய தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்றின் தாக்கம் சென்னையில் குறையத் தொடங்கியுள்ளதாகத் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று மட்டும் மாநிலத்தில் 30,744 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டயறிப்பட்டுள்ளது.

முதல் அலையை விட அதிக பாதிப்பு.. இந்த 6 மாநிலங்களில் நிலைமை மிக மோசம்.. மத்திய அரசு கவலை! முதல் அலையை விட அதிக பாதிப்பு.. இந்த 6 மாநிலங்களில் நிலைமை மிக மோசம்.. மத்திய அரசு கவலை!

சென்னையில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ள போதிலும், பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் உயர்ந்து வருவதால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பும் உயர்கிறது.

 ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

இதனிடையே கொரோனா பாதிப்பு வரும் காலத்தில் அதிகரித்தால் அதைச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

குறைவு

குறைவு

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் டிசம்பரில் 100இல் ஒருவருக்கு என்கிற விகிதத்தில் இருந்த இறப்பு விகிதம், தற்போது 1000இல் ஒருவர் என்கிற விகிதமாகக் குறைந்துள்ளது. அதேபோல 2வது அலையின் போது 500 மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்த ஆக்சிஜன் தேவை, இப்போது 117 மெட்ரிக் டன் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.

 தலைநகர் சென்னை

தலைநகர் சென்னை

சென்னையில் கொரோனா தாக்கம் உச்சத்தைத் தொட்டு, இப்போது குறையத் தொடங்கியுள்ளது. பாசிட்டிவ் விகிதம் 30%இல் இருந்து தற்போது 20ஆக குறைந்துவிட்டது. இருப்பினும், சில பகுதிகளில் குறிப்பாக சோளிங்கநல்லூர் மணலி, அம்பத்தூர் மாதவரம் ஆகிய மண்டலங்களில் தொற்றைக் குறைப்பதில் சவாலாக உள்ளது. சென்னையைப் பொருத்தவரை தொற்று குறைவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணம். சென்னை மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றியதால் வைரஸ் பாதிப்பு வேகமாகக் குறைக்க முடிந்தது.

 ஞாயிறு ஊரடங்கு

ஞாயிறு ஊரடங்கு

அதேபோல மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் குறையத் தொடங்க வேண்டும். அப்போது தான் கர்நாடகாவைப் போலவே வார இறுதி ஊரடங்கைக் கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பைக் குறைக்கக் கடந்த 3 வாரங்களாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 சென்னையில் என்ன நிலை

சென்னையில் என்ன நிலை

சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாகக் கடந்த ஜன. 16ஆம் தேதி சென்னையில் 8987 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் தலைநகர் சென்னையில் தொடர்ந்து ஒரு வாரமாகக் குறைந்தே வருகிறது. நேற்று சென்னையின் கொரோனா பாதிப்பு 6500க்கு கீழ் குறைந்துவிட்டது. அதேபோல 30% வரை சென்ற பாசிட்டிவ் விகிதமும் 25க்கு கீழ் குறைந்துவிட்டது. இருப்பினும் கோவை, ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
TN Health Secretary Radhakrishnan says Corona cases are started to reducing in chennai. TN Health Secretary Radhakrishnan explains about Sunday Corona lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X