சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் முறை அமல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் முறை நடைமுறைக்கு வருகிறது.

நாட்டின் பல பகுதிகளில் ஒரே நாடு ஒரே ரேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 16 மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்திருந்தார். இதன்படி எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவரும் நாட்டின் எந்த ஒரு ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க முடியும்.

TN implements One Nation One Ration Card scheme from Today

தமிழகத்தில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதன்படி இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் முறை அமலுக்கு வருகிறது.

இதெல்லாம் நடந்தால் போதும்.. நிர்மலா சீதாராமனின் 'மேஜிக்' வேலை செய்யுமா? மிக முக்கியமான 10 விஷயங்கள்!இதெல்லாம் நடந்தால் போதும்.. நிர்மலா சீதாராமனின் 'மேஜிக்' வேலை செய்யுமா? மிக முக்கியமான 10 விஷயங்கள்!

முதல் கட்டமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். விரைவில் பிற மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் காமராஜ் கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இத்திட்டம் இன்று முதல் அமலாகிறது.

English summary
Tamilnadu govt implement the One Nation One Ration Card scheme from Today,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X