சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல் முடிவு.. கட்சி நிர்வாகிகளிடம் சீறிய ராமதாஸ்.. கூட்டணி குறித்து புதிய முடிவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

இதில் பதிவான வாக்குகள் கடந்த 12-ம் தேதி எண்ணப்பட்டன. சட்டமன்ற தேர்தலைபோல் உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க அமோக வெற்றி பெற்றது. திமுகவுக்கு டப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பின்னடைவை சந்தித்தது.

பா.ம.க.வின் நிலை

பா.ம.க.வின் நிலை

இதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்த பா.ம.க. 47-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளை கைப்பற்றி இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பா.ம.க எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடந்தது. கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமதாஸ் கோபம்

ராமதாஸ் கோபம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், இதில் பா.ம.க.வின் செயல்பாடுகள், எதிர்காலத்தில் பா.ம.க.வின் செயல்திட்டம், கூட்டணி நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அப்போது உள்ளாட்சி தேர்தல் முடிவால் மிகுந்த கோபம் அடைந்த ராமதாஸ் பாமக நிர்வாகிகளை லெப்ட்-ரைட் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

விசுவாசமாக வேலை செய்யவில்லை

விசுவாசமாக வேலை செய்யவில்லை

கட்சிக்கு சிலர் விசுவாசமாக வேலை செய்யாததே தோல்விக்கு காரணம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
தனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இனி வேறு யாருடனும் கூட்டணி கிடையாது. கடைசி நேரத்தில் முடிவில் மாற்றம் இருக்காது. கட்சி மாறுவோர் இப்போதே சென்று விடுங்கள். இருப்பவர்கள் ஒற்றுமையாக வேலை பார்க்க வேண்டும் என்று ராமதாஸ் கோபத்துடன் பேசியுள்ளார்.

 கோட்டையில் அன்புமணி ராமதாஸ்

கோட்டையில் அன்புமணி ராமதாஸ்

தீபாவளிக்கு பிறகு பா.ம.க. நிர்வாகிகள் ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்று மக்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள். மக்களின் மனதை மாற்றி என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி ராமதாஸை உட்கார வைக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
ramadoss who is frustrated with the results of the local elections, is said to be furious with PMK executives. The PMK did not get the much-anticipated victory in the local elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X