அட, நீங்க வேற.. தேர்தல் முறைகேட்டை திசை திருப்ப ஹிஜாப்பை பெருசுபடுத்துறாங்க.. சொல்வது அண்ணாமலை
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற்றதா என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் ஹிஜாப் அணிந்த பெண்ணை பாஜக பிரமுகர் வெளியேற சொன்னதாக சர்ச்சை எழுந்தது. இதை அண்ணாமலை மறுத்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

பணபலம்
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறூகையில், ''இந்த தேர்தலில் பண பலம், அராஜகம், குண்டர்களை வைத்து அட்டூழியங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது. இதை திசை திருப்புவதற்காக மதுரை மேலூர் வாக்குச் சாவடியில் வாக்காளரின் முகத்தை காட்ட சொன்ன பாஜக பூத் ஏஜெண்ட் மீது ஹிஜாப் புகார் ஆளும் கட்சி, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதுரை
மதுரை ஹிஜாப் பிரச்சனை திரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை பாஜக வரவேற்கிறது. கடவுச் சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முகம் காட்ட அனுமதிக்குப்போது வாக்களிக்கும்போது முக அடையாளத்திற்காக புர்காவை அகற்ற கூடாதா என உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையில் பாஜக ஏஜெண்ட் முகம் காட்ட சொன்னார். ஹிஜாப்பை அகற்ற சொல்லவில்லை.

ஆளும் கட்சி
இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வீடு வீடாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட வெறுப்பால் பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலை விட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 14சதவிகிதம் அளவிற்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது'' என்றார்.

தேர்தல்
கடந்த சனிக்கிழமை அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னை அண்ணாநகரில் வாக்களிக்க வந்தபோது, அவரின் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக புகாரளித்தார் அண்ணாமலை. ஆனால் அமைச்சர் ஓட்டை யாரும் போடவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்பிறகே அமைச்சர் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications