பேரூராட்சிகளிலும் திமுக ஆதிக்கம்.. அதிமுக இரண்டாம் இடம்.. அடுத்தடுத்த இடங்களில் சர்ப்ரைஸ் முடிவுகள்
சென்னை: நடந்து முடிந்துள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிகமாக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது திமுக.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 138 நகராட்சிகளில் திமுக132 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

பேரூராட்சி
மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 7605 பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 4259 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1023 இடங்களிலும், இதர கட்சிகள் 894 இடங்களிலும், பாஜக 216 இடங்களிலும், அமமுக 62 இடங்களிலும், பாமக 57 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

வாக்கு எண்ணிக்கை
தமிழகம் முழுவதும் உள்ள 489 பேரூராட்சிகளில் தற்போது வரை திமுக அதிக பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இதர கட்சிகளும், நான்காவது இடத்தில் பாஜகவும் இருக்கின்றது. இந்த தேர்தலில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஒரு பேரூராட்சியிலும் வெற்றி பெறவில்லை.

திமுக
பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 4259 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல மாவட்டங்களின் பேரூராட்சிகளை மொத்தமாக தட்டித் தூக்கியிருக்கிறது திமுக. திருச்சி, விருதுநகர், திருவாரூர், வேலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், விழுப்புரம் என பல மாவட்ட பேரூராட்சியை மொத்தமாக கைப்பற்றியுள்ளது திமுக. அதிமுக இரண்டாவதாக பேரூராட்சிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், பல இடங்களில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தோலிய் எதிர்பார்த்த ஒன்று என அதிமுக தெரிவித்துள்ளது.

பாஜக
பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் பாஜக 216 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக அதிக பேரூராட்சி வார்டுகளில் வென்றிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் பேரூராட்சியை பாஜக கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது. மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இருவரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒருவரும் வென்றிருக்கின்றது. கன்னியாகுமரியில் திமுக, அதிமுக கட்சிகளை வாஷ் அவுட் செய்துள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் பாஜக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications