விஏஒ முதல் நில அளவையர் வரை..டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு...இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் , தட்டச்சு செய்பவர், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
அரசு காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டம் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. குரூப் 2 தேர்வுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காலி பணியிடங்கள் ஆக 7383 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் வீட்டு வசதி வாரியங்கள் உள்ள 163 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது என்பது பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவில் மூலம் நிரப்பப்படும் என்றும், இத்தேர்வு காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மூன்று மணி நேரம் நடைபெறும் என்றும் அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாகவும் , 75 கேள்விகள் பொது அறிவு தொடர்பானதாகவும் இருக்கும். குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்றும், நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கு இன்று முதல் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகள் அல்லது 1800-419-0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications