சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா.. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு.. 92 பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் 92 பணிக்கான குரூப் 1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மொத்தம் 3.16 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், விண்ணப்ப திருத்தத்துக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்படடது. துணை கலெ க்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரி உதவி கமினஷர் உள்பட பல்வேறு துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..அக்டோபர் 30ல் முதல்நிலைத் தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..அக்டோபர் 30ல் முதல்நிலைத் தேர்வு

92 பணியிடங்கள் என்னென்ன?

92 பணியிடங்கள் என்னென்ன?

அதன்படி துணை கலெக்டர் பணிக்கு 18, துணை போலீஸ் சூப்பிரண்டு பணிக்கு 26, வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு 25, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பணிக்கு 13, கிராமப் மேம்பாட்டு உதவி இயக்குனர் பணிக்கு 7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணிக்கு 3 இடங்கள் என மொத்தம் 92 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.

நேற்று கடைசி தேதி

நேற்று கடைசி தேதி

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100 முதல் 2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை மாத ஊதியமாக கிடைக்கும். விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் tnpscexams.in இணையதளம் மூலம் 22.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி நேற்று தேர்வுக்கான விண்ணப்ப தேதி முடிவடைந்தது.

 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 3.16 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 92 பணியிடத்துக்கு 3,16,678 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் மாதம் 30ம் தேதி நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து மெயின் தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப திருத்த அவகாசம்

விண்ணப்ப திருத்த அவகாசம்

இதற்கிடையே ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விண்ணப்பத்தாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது அதன்படி விண்ணப்ப திருத்தத்த்தை விண்ணப்பத்தாரர்கள் 27.08.2022 மதியம் 12 மணி முதல் 29.08.2022 மதியம் 11.59 வரை மேற்கொள்ள முடியும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

English summary
It has been announced by TNPSC that a total of 3.16 lakh people have applied for the Group 1 examination for 92 posts, 3 days have been given for the revision of the application.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X