சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இயேசு பிரான் அவதரித்த நன்னாள்.. களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை..

Google Oneindia Tamil News

சென்னை: இயேசு கிறிஸ்து அவதரித்த நாளான இன்று உலகமெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடனம், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட தேவாலயங்களில் ஏராளமான மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் கட்டுப்பாடுகளுடன் வழக்கத்தை விட எளிமையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு அரசின் செயல்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் கிறிஸ்துமஸ் வழிபாடு நடத்துவதற்கு ஏராளமான தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதத்தின் தொடக்கம் முதலே மக்கள் தங்கள் வீடுகளில் முகப்புகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து பண்டிகையை கொண்டாட தயாராகி வந்தனர். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. தேவாலயங்களில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான மக்கள் கூடி இருக்கின்றனர். இரவு 11 மணி முதல் அதிகாலை 2 வரை இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன

உலகம் முழுவதும் கொண்டாட்டம்

உலகம் முழுவதும் கொண்டாட்டம்

சில திருச்சபைகளில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி காலை 7 மணி வரை பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான மக்கள் வருகை தந்தன.ர் இந்த நிகழ்ச்சியில் சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் மக்களுக்கு சிறப்பு நற்செய்தியை வழங்கினார்.

சென்னயில் வழிபாடு

சென்னயில் வழிபாடு

சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயம் பரங்கி மலையில் அமைந்துள்ள மாதா ஆலயம் பாரிமுனை அந்தோணியார் ஆலயம் எழும்பூர் திருஇருதய ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இது மட்டுமல்லாமல் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Recommended Video

    திருவெற்றியூர் தேவாலயத்தில் 53 அடி பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம்… பார்வையாளர்கள் வியப்பு!
    கொரோனா கட்டுப்பாடுகள்

    கொரோனா கட்டுப்பாடுகள்

    இதேபோல் தூத்துக்குடி மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது . வழிபாடு முடிவடைந்து கிறிஸ்துமஸ் மக்கள் ஒருவருக்கொருவர் சமாதானத்தை தெரிவிக்கும் வகையில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதோடு இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். தற்போது கொரோனா பரவி வருவதால் ஆலயங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன . முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் இந்த வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

    English summary
    Today, the day of the birth of Jesus Christ, Christmas is celebrated all over the world with the usual enthusiasm, with various restrictions due to the spread of the corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X