அதிகாலையில் ஜில்லென்ற பனி... பகலில் சுள்ளென்ற வெயில் - கடலோர மாவட்டங்களில் சாரல் மழை
தமிழகத்தில் அதிகாலையில் பனிமூட்டமும், பகலில் சுள்ளென்று வெயி
சென்னை: காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் மாதம் முழுவதும் பருவமழை கொட்டித்தீர்த்தது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. டிசம்பர் மாதம் முதலே மழை குறைந்து விட்டது.
அதிகாலையிலும் மாலை நேரங்களிலும் பனிமூட்டம் காணப்படுகிறது. பகலில் சுள்ளென்ற வெளியில் அடித்தாலும் குளிர் காற்றும் வீசுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்த நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

லேசான மழை
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

கடலோர மாவட்டங்களில் மழை
கடலோர மாவட்டங்களில் 30ஆம் தேதியன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

2 நாட்களுக்கு மழை
டிசம்பர் 31, ஜனவரி 1 ஆம் தேதியன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை அளவு
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 28 வரை 704.03 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 446.7 மிமீ அளவுதான். நடப்பாண்டு இயல்பை விட 58% அளவிற்கு மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 32.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications