சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செப்.1ம் தேதி முதல் தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிரடியாக உயருகிறது... விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட உள்ளது. ரூ.5 முதல் ரூ10 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Recommended Video

    Corona vaccine மக்களுக்கு இலவசமாக வழங்க திட்டம் - Australia PM அறிவிப்பு

    நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.

    இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவது வழக்கம். ஒரு பகுதி சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதலும் மறுபாதி சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதலும் கட்டணம் உயர்த்தப்படும்.

     "கோயிலுக்கு போனால்.. முதல்வர் ஆயிடலாமா?".. சிவனேன்னு இருக்கும் துர்கா ஸ்டாலினை.. சீண்டி விட்ட சாமி!

    கட்டணம் உயர்வு

    கட்டணம் உயர்வு

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் கட்டண உயர்வு ஏப்ரல் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இங்கு கட்டணங்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.

    சமயபுரம் டோல்கேட்

    சமயபுரம் டோல்கேட்

    கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ள 21 சுங்கச்சாவடிகளின் விவரம் பின்வருமாறு: அதன்படி புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை),ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்), மேட்டுபட்டி (சேலம்), கொடைரோடு(திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜய மங்கலம்(குமாரபாளையம்),

    விக்கிரவாண்டி டோல்கேட்

    விக்கிரவாண்டி டோல்கேட்

    திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை(தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்) விக்கிரவாண்டி (விழுப்புரம்), திருப்பரைத்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி). ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    மக்கள் அதிருப்தி

    மக்கள் அதிருப்தி

    சுங்க கட்டணத்தை உயர்த்துவதால், சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயர்த்தப்படும். எனவே காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மக்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணத்தை வழக்கம் போல் உயர்த்துவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    The toll charges will hike on 21 toll gates in Tamil Nadu from September 1st. A highway department official said the toll would be increased from Rs 5 to Rs 10.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X