தக்காளியுடன் போட்டி போடும் முருங்கைக்காய் - சதமடித்த வெண்டை, கத்தரியால் இல்லத்தரசிகள் கவலை
காய்கறிகள், தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.160 ரூபாய்க்கு விற்பனையாவதோடு அனைத்து காய்கறிகளுமே விலை உயர்ந்துள்ளதால் எதை வாங்கி சமைப்பது என கவலையடைந்துள்ளனர்.
சென்னை: தொடர்மழையால் காய்கறிகள், தக்காளி விளைச்சல் குறைந்து சந்தைக்கு வரத்து குறைவாக உள்ளது. தமிழகம் முழுவதும் தக்காளி விலை ஒரு கிலோ 130 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. தாக்களியுடன் போட்டி போட்டுக்கொண்டு முருங்கைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் என பல காய்கறிகளும் 100 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்துள்ளதால் வீட்டு பட்ஜெட்டில் அதிக அளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
சென்னை, கோவை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருப்பூர், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தக்காளி, காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. கனமழையாலும், ஒரு கிலோ 110 முதல் 130 வரை விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் 140 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுகிறது.

கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடுமையான மழை பொழிவால் கீரைகள் விளைநிலங்களிலேயே அழுகிவிட்டன. அரைகீரை,சிறுகீரை, முளை கீரை, தண்டு கீரை, மற்றும் மணத்தக்காளி,கரிசலாங்கண்ணி கீரை, உள்ளிட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த கீரை வகைகளின் வருகை இல்லை. பசலை கீரை,பாலக்கீரை, பொன்னாங்கன்னிகீரை, முருங்கைக் கீரை வெங்காய தாள், மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு கீரை 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் - ஒரு கிலோ
- பல்லாரி வெங்காயம் ரூ. 40
- சின்ன வெங்காயம் ரூ. 80
- நவீன் தக்காளி ரூ. 140
- நாட்டு தக்காளி ரூ.130
- உருளை ரூ. 40
- ஊட்டி கேரட் ரூ.65
- பெங்களூர் கேரட் ரூ. 50
- பீன்ஸ் ரூ. 90
- பீட்ரூட் ரூ. 60
- கர்நாடக பீட்ரூட் ரூ. 50
- சவ் சவ் ரூ.20
- முள்ளங்கி ரூ. 50
- முட்டை கோஸ் ரூ.40
- வெண்டைக்காய் ரூ.100
- உஜாலா கத்திரிக்காய் ரூ.100
- வரி கத்திரி ரூ. 40
- காராமணி 60
- பாவக்காய் ரூ.40
- புடலங்காய் ரூ. 50
- சுரக்காய் ரூ. 30
- சேனைக்கிழங்கு ரூ. 20
- முருங்கைக்காய் ரூ. 130
- சேம கிழங்கு ரூ. 25
- காலிபிளவர் ரூ. 30
- வெள்ளரிக்காய் ரூ. 20
- பச்சை மிளகாய் ரூ.30
- அவரைக்காய் ரூ.80
- மஞ்சள் பூசணி 10
- வெள்ளை பூசணி.10
- பீர்க்கங்காய் ரூ.35
- எலுமிச்சை 50
- நூக்கல் 50
- கோவைக்காய் ரூ.40
- கொத்தவரங்காய் 40
- வாழைக்காய் 1 காய் ரூ. 10
- வாழைப்பூ ரூ. 20
- பச்சைகுடமிளகாய் ரூ. 70
- வண்ண குடமிளகாய் ரூ. 190
- பட்டாணி ரூ. 90
- இஞ்சி ரூ.45
- பூண்டு ரூ.130
- கொத்தமல்லி ஒரு கட்டு ரூ. 12
- புதினா ரூ. 6
- கருவேப்பிலை ரூ. 30
- தேங்காய் - ஒரு காய் 20
- சௌ சௌ ரூ.20

தக்காளி, காய்கறிகளின் விலை அதிகரிப்பினால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். இதனிடையே நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் உள்ளிட்ட 65 பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுமென கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி ரூ. 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, கோவை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூரில் இவை விற்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, நாள் ஒன்றுக்கு 14 டன் தக்காளி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
தொடர் மழை காரணமாக செடிகளில் காய் பிடிப்பது குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. பருவ மழை முடிந்த பிறகே காய்கறிகள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை காலங்களில் டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிறைய காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்கறிகள் இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் எப்படி வாங்கி சாப்பிடுவது என்று கவலைப்படுகின்றனர் இல்லத்தரசிகள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications