செஸ் ஒலிம்பியாட் தொடர்... முதல்முறையாக ஒலிம்பிக் போல தீ சுடர்! களைகட்டும் மாமல்லபுரம்!
சென்னை: ஒலிம்பிக்கை போல் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கும் தீச்சுடர் அறிமுகம் செய்யப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்தப் போட்டியை நடத்த ரூ.92.13 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்தத் தொடரை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்த சிறப்பு அதிகாரி தலைமையில் குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

விமான நிலையத்தில் சிறப்பு கவுன்ட்டர்
வரும் ஜூலை மாதம் முதலே வெளிநாட்டு வீரர், வீராங்கனை, பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் என ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னை விமான நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக சிறப்பு கவுன்ட்டர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுன்ட்டர்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்திய அணி அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா தரப்பில் 4 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரு ஆடவர் அணிகள், இரு மகளிர் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு ஜாம்பவான் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் சுடர்
இந்தநிலையில் ஒலிம்பிக்கை போலவே செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு தீச்சுடர் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீச்சுடர் இந்தியாவில் தொடங்கி, உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடப்பு தொடரில் போதிய நேரமின்மை காரணமாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு மட்டும் தீச்சுடர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் செஸ் விளையாட்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனவு நிறைவேறியுள்ளது
இதுகுறித்து பேசிய செஸ் ஒலிம்பியாட் இயக்குநர் பரத் சிங் சவுஹான், ஒலிம்பிக் தொடருக்கு ஏதென்ஸ் எப்படியோ, அப்படியே செஸ் விளையாட்டுக்கு இந்தியா. செஸ் ஒலிம்பியாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளது. இன்னும் சில நாட்களில் தீச்சுடர் பயணிக்கும் வழியும், நேரமும் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications