"சீர்காழியில் சித்தப்பா வீட்டு விருந்தை சிறப்பித்த வாதகோடாங்கி.." கலாய்க்கும் டிஆர்பி ராஜா
சென்னையில் பெருமழை கொட்டித்தீர்த்து வெள்ளம் தேங்கிய நிலையில் இந்திய வானிலை மையம் அறிவிப்பை கேலியாக பகிர்ந்துள்ளார் எம்எல்ஏ டிஆர்பி ராஜா.
சென்னை: அதிகனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்த பின்னர் இந்திய வானிலை மையம் தாமதமாக ரெட் அலர்ட் விடுத்தாக திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் படத்தை போட்டு மிம்ஸ் ஆக பகிர்ந்துள்ளார் டிஆர்பி ராஜா.
நவம்பர் மாதத்துடன் மழை ஓய்ந்து விட்டது என்று மக்கள் நினைத்திருந்த நிலையில் அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது இதோ வருகிறேன் என்று கூறி டிசம்பர் மாத இறுதியில் கொட்டித்தீர்த்து விட்டது மழை. ஒரே நாளில் 10 மணி நேரம் விடாமல் கொட்டிய மழையால் எங்கும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழை வரும் முன்பே இந்திய வானிலை மையர் ரெட் அலர்ட் அறிவிப்பு கொடுப்பது வழக்கம். நேற்றைய தினம் அதிகனமழை வரும் என்று வானிலை மையம் எந்த முன் அறிவிப்பும் தரவில்லை. மழை பெய்து வெள்ளம் சூழ்ந்த பின்னர் இரவு நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

23ஆம் புலிகேசி ஒற்றன் காட்சி
வானிலை அறிக்கையின் செய்தியைப் பார்த்த எம்எல்ஏ டிஆர்பி ராஜா, ரொம்ப லேட் என்று கூறி இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் வரும் ஒரு காட்சியை ஒப்பிட்டு மீம்ஸ் ஆக பகிர்ந்துள்ளார்.

போருக்கு வந்த எதிரி மன்னன்
தூது அனுப்பிய புறாவை வறுத்து சாப்பிட்ட 23ஆம் புலிகேசி மீது எதிரி நாட்டு மன்னன் வல்லவராயன் படையெடுத்து வருவார். இம்சை அரசன் புலிகேசியோ வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு போர் நடைபெறாமல் தன்னை காப்பாற்றிக்கொள்வார்.

ஒற்றன் தாமத செய்தி
இந்த களேபரம் எல்லாம் முடிந்த பின்னர் மெதுவாக புலிகேசியின் ஒற்றர் சபைக்கு வருவார். ஒற்றருக்கு சரியான கவனிப்பு கொடுப்பார் புலிகேசி. வந்த விசயத்தை சொல் என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய் என்று புலிகேசி கேட்க, அதற்கு ஒற்றனோ, மன்னா, வல்லவராயன் நம்மீது படையெடுத்து வரப்போகிறானார் என்று நடந்து முடிந்த செய்தியை சொல்வார்.

மீம்ஸ் ட்வீட்
கோபத்தில் கொந்தளிப்பார் புலிகேசி. தங்கை வீட்டில் நடந்த கெடா வெட்டு விருந்தை சிறப்பித்து விட்டு வந்ததாக ஒற்றர் கூறுவார். ஒற்றர் லேட்டாக சேதி கொண்டு வந்தது போல வானிலை முன் அறிவிப்பு மழை வந்து முடிந்த பின்னர் தாமதமாக வருவதாக தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் டிஆர்பி ராஜா எம்எல்ஏ.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications