ரீல்ஸ் வந்தது.. முதலீடு வரவில்லை.. தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீங்க.. கேள்வி கேட்ட டிஆர்பி ராஜா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாடுகளில் தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள் என்று முதல்வர் விஜய்யை திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார். உண்மையான முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு எப்போது வரும் என்று கேள்வி எழுப்பியுள்ள டிஆர்பி ராஜா, ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் பெயரை கூட சொல்லாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

முதலீடுகளை ஈர்க்க 6 நாள் பயணமாக லண்டன் சென்ற முதல்வர் விஜய், நேற்று சென்னை திரும்பினார். லண்டனில் மொத்தமாக ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தயவு செய்து வெளிநாட்டிற்கு சென்று தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்.

TRB Rajaa

ரீல்ஸ் போடுவதற்காக தான் முதல்வர் விஜய் லண்டன் சென்றாரோ என்ற தோன்றுகிறது. முதலீடு பயணத்தின் போது ரீல்ஸ் மட்டுமே வந்தது. ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலீடுகளை தான் மீண்டும் அறிவித்திருக்கின்றனர். எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலீடுகளை தொடர்வதில் பிரச்சனை இல்லை. ஆனால் புதிய முதலீடுகள் எப்போது தமிழ்நாட்டிற்கு வரும்?

திமுக ஆட்சியின் போது முதலீடுகள் ஈர்க்க வெளிநாடுகளுக்கு சென்றால், பத்திரிகையாளர்களுக்கு தெளிவாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் அறிக்கைகள் வெளியாகும். சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகும். முதலீடுகள் ஈர்த்துவிட்டு சென்னை திரும்பும் போதும், ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்திப்பார். ஆனால் இம்முறை விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.

முதல்வர் இல்லையென்றாலும், அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே.. இந்த பயணத்தில் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறேன் என்று சொல்லிய நிறுவனத்தின் பெயரை சொல்லாதது ஏன்? புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதா? அதேபோல் மதர்சன் என்ற நிறுவனம் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறது. அந்த நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இடத்தில் கையெழுத்து போட வர வேண்டியது யார்? அவர் சாதாரண ஒரு மேலாளர் பொறுப்பில் இருப்பவர்.. கார் ரேஸ் பார்க்க போகிறேன் என்றால், சொல்லிவிட்டே போகலாமே.. யார் கேட்க போகிறார்கள். எஃப்1 கட்டமைப்பை உருவாக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை.. அந்த நிலத்தை எங்கிருந்து எடுக்கப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

ஹெல்மன் நிறுவனம் தொடர்பாக மார்ச் மாதமே முதலீடு கொண்டு வரப்பட்டுவிட்டது. அதனை தாமதமாக அறிவித்தீர்கள்? வில்சன் ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனம் தான். அதேபோல் லண்டன் சென்ற முதல்வர் விஜய், தமிழ் மக்களை ஏன் சந்திக்கவில்லை? திமுக ஆட்சியின் போது ஒவ்வொரு பயணத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்களை சந்தித்தோம்.

தொழில்துறை அமைச்சரும் செல்லவில்லை.. தொழில்துறை செயலாளரும் செல்லவில்லை.. அங்கு ஒரு முதலீட்டாளர்கள் மாநாட்டை கூட நடத்தாமல் வந்திருக்கிறார்கள். முதல்வர் விஜய் ஒரு பயணம் மேற்கொள்ளும் போது கூட அதனை நடத்த முடியவில்லை என்றால், எப்படி மற்ற நேரங்களில் நடத்துவீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+