நாதஸ் திருந்திட்டானாம்..! நான் பிக் பாஸுக்கு போறேன்.. வடிவேல் கணக்காய் ‘ரீல்’ விட்ட திருச்சி சாதனா?
சென்னை : டிக்டாக்கில் பேமஸாகி பேஸ்புக் லைவ்வால் களி திங்கும் நிலை வரை சென்று தப்பித்த கலர்கலராய் இன்ஸ்டாகிராம் ரீல் விட்டு வந்த திருச்சி சாதனா, தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போகப் போவதாக இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசியுள்ள நிலையில், அவரை 'நாதஸ் திருந்திட்டானாம்' என நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
திருச்சி- கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் சாதனா. 'டிக்டாக்' பிரபலமான இவர், கடந்த சில நாட்களாக அவரது யூடியூப் பக்கத்தில் ஆபாச வீடியோக்களை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.
அதிலும், சாதனா ஆபாசமாக பேசியபடி, வெளியிட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளவாசிகளை அதிர வைத்தது.

திருச்சி சாதனா
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதுகுறித்து நச்சலூர் கிராம மக்கள், கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், 'கிராமத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஆபாச வீடியோக்களை வெளியிடும் சாதனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆபாச வீடியோ
அதையடுத்து, சாதனாவை குளித்தலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், தங்களது பாணியில் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். உடனே, 'நான் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை வெளியிட மாட்டேன்' என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்த சாதனா, அதையே பேசி ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக நைட்டி அணிந்து இரவு நேரங்களில் ஆபாசமாக பேசுவதை விடவில்லை.

பகீர் புகார்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற பாடலுக்கு ஆபாச அசைவுகளுடன் நடனமாடியதாக புகார் எழுந்த நிலையில் அவரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனால் ஒரு மாத காலமாய் அடக்கி வாசித்த திருச்சி சாதனா நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று இன்ஸ்டாகிராம் நேரலையில் தோன்றினார். அதில் 'ரசிகர்கள்; கழுவி ஊற்றியதை கண்டு கொள்ளாமல் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பிக் பாஸ்
அப்போது ஒரு ரசிகர் ஒருவர், நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சொல்கிறார்களே உண்மையா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த திருச்சி சாதனா கண்டிப்பாக நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.. ரசிகர்கள் உங்களுடைய எல்லோருடைய ஆதரவும் எனக்கு தேவை' என கூறினார். தற்போது பிக் பாஸ் சீசன் எப்போது தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக திருச்சி சாதனா கூறி இருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications