வணக்கம் வைத்த நடிகை த்ரிஷா.. கண்டுகொள்ளாத எஸ்.ஏ.சந்திரசேகர்.. சுதந்திர தின விழாவில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த சுதந்திர விழாவில் முதல்வர் விஜய் கொடியேற்றுவதை காண்பதற்காக நடிகை த்ரிஷா தனது அம்மாவுடன் வந்திருந்தார். அவருக்கு முதல்வர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அப்போது விஜய்யின் தாய் ஷோபாவுக்கு வணக்கம் கூறிய த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் வணக்கம் வைத்தார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

நாட்டின் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார். முதல்வராக விஜய் தேசியக் கொடி ஏற்றுவதை பார்க்க அவரின் குடும்பத்தினரான தாய் ஷோபா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

Trisha SA Chandrasekhar Vijay Independence Day 2026

காலை 7.30 மணியளவிலேயே இவர்கள் அங்கு வந்துவிட்டனர். தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் முதல்வர் விஜய் தேசியக் கொடி ஏற்றுவதை பார்க்க கோட்டை கொத்தளத்திற்கு வந்தார். வழக்கமாக தோழிகளுடன் வரும் த்ரிஷா, இம்முறை தனது தாய் உமா கிருஷ்ணன் உடன் பங்கேற்றார். அவருக்கு எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோருக்கு அடுத்து இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனால் ஷோபாவுக்கு முதலில் வணக்கம் வைத்தார் த்ரிஷா. அதற்கு ஷோபாவும் பதில் வணக்கம் வைத்தார். அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் த்ரிஷா வணக்கம் வைக்க, அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. இதேபோல் த்ரிஷாவின் தாய் உமா வணக்கம் வைத்த போது, ஷோபா மற்றும் சந்திரசேகர் இருவருமே வணக்கம் வைத்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

முதல்வர் விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் தொடர்ச்சியாக த்ரிஷா இருந்து வருகிறார். த்ரிஷாவின் இந்த நெருக்கம் தவெகவினர் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சிகள் த்ரிஷா குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். இதனால் விரைவில் நடிகை த்ரிஷா தவெகவுக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+