சசிகலாவின் திடீர் முடிவு! டெல்லி குரலாய் ஒலிக்க போகும் டிடிவி! எடப்பாடிக்கு எதிராக ‘தாமரை’ திட்டம்?
சென்னை : அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுத்து விட்ட நிலையில் தற்போது டெல்லியின் குரலாக பேசி வருகிறார் டிடிவி தினகரன் என்றும் அவர் விரைவில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்கின்றனர் தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் எடப்பாடி இடையே இருந்த மோதலானது தற்போது பாஜக டிடிவி தினகரன் இடையேயான மோதலாக மாறி இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக அரசியல் களத்தில் தீவிரமாக பேசி வந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக அமைதி காக்கிறார்.
காரணம் எப்படியும் அதிமுகவில் மீண்டும் இணைந்து விடலாம் அதற்கு டெல்லி தலைமை ஆதரவளிக்கும் என நம்புகிறார். இதனால் அடுத்த பொதுக்குழு என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

டிடிவி தினகரன்
இது ஒரு புறம் இருக்க பல ஆண்டு அரசியல் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பேசு பொருளாக மாறி இருக்கிறார் டிடிவி தினகரன். பாஜக தலைமையுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வந்தவர் தற்போது திமுக எதிர்ப்புக்காக மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்துடன் அதிமுகவில் இணைய தயார் என கூறி வருகிறார் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சசிகலா
ஓபிஎஸ் சசிகலாவுக்கு செய்த துரோகத்தை உணர்ந்து திருந்தி விட்டதாகவும் அதனால் அவருடன் இணைய தயார் எனக் கூறியிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தின் மறு உருவம் அவர் துரோகத்தின் உச்சியில் இருக்கிறார் என மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் ஓபிஎஸ்ஐ மீண்டும் அதிமுகவில் கொண்டு வர மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது பாஜக தலைமை. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிக்கும் பொறுப்பு டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
கடந்த சில நாட்களாக டெல்லி தலைமையுடன் நெருக்கத்தில் இருக்கும் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறி வருகிறார். இது குறித்து எடப்பாடி அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பது தான் பேசு பொருளாக இருக்கிறது. சில முக்கிய தலைவர்கள் அவர் பக்கம் தாவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கு பிறகு அரசியலில் மேலும் மாற்றங்கள் வரலாம் என்கின்றனர். இதற்கிடையே பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆரிய கட்சிகளை கொண்டு வர பாஜக முயன்று வருகிறது.

பாமக - தேமுதிக
கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் இரு கட்சிகளும் தனி தனியாக களம் கண்டன. இதனால் யாருக்குமே லாபம் இல்லாமல் போனது. இதனால் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மீண்டும் தொடர வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. இதனால் தமிழக முழுவதும் தேமுதிகவுக்கு இருக்கும் ஓரளவு செல்வாக்கையும், வட மாவட்டங்களில் பாமகவுக்கு இருக்கும் செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாமக இல்லை என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

சசிகலா
இதனால் பாஜக தலைமை சற்று அதிருப்தியில் இருக்கிறது எனினும் பாமகவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வரும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாக ஆழ்ந்த அமைதியில் இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அவர் சிறை சென்று வந்த பிறகு மிக அமைதியான அணுகுமுறையையே கடைபிடித்து வருகிறார். தனக்கு ஆதரவாக இருந்தவர்கள் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்கள் தற்போது எதிரணியில் இருப்பதை விரும்பாமல் இருக்கும் அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விடலாமா என்று ஆலோசித்து வருகிறார்.

பாஜகவுக்கு வாக்கு
தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணம் எனக் கூறிவரும் அவர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்கோ அல்லது கூட்டணி தொடர்பான விவகாரங்களில் தலையிட மாட்டார் என்கின்றனர் மன்னார்குடி நிர்வாகிகள். அடுத்து என்ன நடக்கும் என்பதே அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் பாஜகவுக்கு வாக்கு அதிகரிக்கவில்லை எனவும், அதிமுக வாக்குகளே பாஜகவுக்கு சென்றுள்ளது என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம்












Click it and Unblock the Notifications