சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டேக்ஓவர்".. சசிகலாவும், 10 தொகுதிகளும்.. வச்சு செய்ய போகும் தினகரன்.. இதுதான் ஆன்மீக அரசியலோ!

டிடிவி தினகரனின் அமமுக போட்டியிடும் 10 தொகுதிகளில் சசிகலா செல்ல உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: இந்த தேர்தலில் அமமுகவின் வெற்றிக்கு சசிகலா மிக முக்கிய காரணமாக இருப்பார் என்ற கருத்து ஆழமாக வேரூன்றப்பட்டு வருகிறது.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதாக அறிக்கை வந்தாகிவிட்டது.. இந்த அறிக்கையை தொடர்ந்து வேறு ஒரு அறிக்கை வரும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால், முதல் அறிக்கையே பெரும்பாலும் இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.. காரணம், சசிகலாவால் அரசியலை விட்டு முழுமையாக ஒதுங்க முடியாது, இந்த விலகல் அறிக்கைக்கு பின்னணியில் வேறு ஏதேனும் பெரிதான காரணம் இருக்கலாம், அல்லது வேறு ஒரு தேசிய கட்சியின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்றும் முணுமுணுக்கப்பட்டது.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இந்த அறிக்கையை சசிகலா விடுத்த கையோடு, சில கோயில்களுக்கு கிளம்பி சென்றார்.. சிவராத்திரி என்பதாலும், கணவர் நடராஜன் உறவினர் வீட்டு விசேஷம் என்பதாலும்தான் சசிகலா சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்கிறார் என்று சொல்லப்பட்டது.. அப்போதும்கூட, சசிகலாவின் தஞ்சை பயணம் அரசியல் காரணங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அமமுகவை சேர்ந்த ஒருசில வேட்பாளர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

 ஆன்மீக பயணம்

ஆன்மீக பயணம்

இப்போதும் அதுபோன்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. அதாவது, மொத்தம் 10 இடங்களில் உள்ள கோயில்களுக்கு சசிகலா பயணம் செய்ய போகிறாராம்.. இந்த 10 இடங்கள் என்பது 10 தொகுதிகள் ஆகும்.. கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்துார், குன்னூர், காரைக்குடி, பொள்ளாச்சி, உசிலம்பட்டி, திருவாடானை போன்றவையே அவைகள் என்றும், இந்த இடங்களிலுள்ள கோயில்களுக்கு சசிகலா செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 10 தொகுதிகள்

10 தொகுதிகள்

இதற்கு காரணம், இந்த 10 தொகுதிகளும் அமமுகவுக்கு சாதகமான தொகுதிகளாம்.. பொதுவாக தென்மண்டலங்களில் அமமுகவுக்கு தானாகவே ஓட்டுக்கள் விழுந்து விடும் என்றாலும், இந்த 10 தொகுதிகளில் கொஞ்சம் இழுபறி நிலை வரலாம் என்றும், அந்த இடங்களை தேர்ந்தெடுத்துதான் சசிகலா ஆன்மீக பயணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது..

 செல்வாக்கு

செல்வாக்கு

அமமுகவுக்கு ஏற்கனவே இருக்கும் செல்வாக்கில் சசிகலா வருகையானது மேலும் பலத்தை தரும் என்றும், வெற்றி பெற முடியாவிட்டாலும், அதிமுகவின் ஓட்டுக்களை சிதறடிக்க முடியும் என்றும் தினகரன் தரப்பு நம்புகிறதாம்.. இந்த 10 தொகுதிகளிலும் ஒன்றில் தினகரனே போட்டியிடுவதால், அங்கு சசிகலா செல்ல வாய்ப்பில்லை என்றும், மற்ற 9 தொகுதிகளுக்கு சென்று வரக்கூடும் என்றும் சொல்கிறார்கள்...

 ஆன்மீக அரசியல்

ஆன்மீக அரசியல்

அதாவது குறைந்தபட்சம் 10 சதவீத ஓட்டை பெற்றுவிட்டால்கூட, அதிமுகவை டேக்ஓவர் செய்ய வாய்ப்புகள் கூடும் என்பதே கணக்காக உள்ளது.. தேர்தல் தேதி நெருங்க நெருங்க இது போன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்து கொண்டிருப்பினும், சசிகலா குறி வைத்ததாக சொல்லப்படும் அந்த 10 தொகுதிகளின் வெற்றி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.. இதற்கு பெயர்தான் "ஆன்மீக அரசியலோ?!"

English summary
TTV Dinakaran and Sasikalas Divine Politics in ten Consitutions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X