சஞ்சனா டீச்சரா இப்படி.. செல்போனை பார்த்தால்.. எல்லாமே 'உவ்வே' ரக.. வீடியோக்கள்.. படங்கள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்த டியூஷன் டீச்சர்

    சென்னை: டீச்சர் சஞ்சனாவின் செல்போனில் வெறும் ஆபாச படங்களும், நிர்வாண படங்களும் நிறைந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர். அவ்வளவு ஆபாச வீடியோவையும் தன்னிடம் பாடம் படிக்க வரும் டியூஷன் பிள்ளைகளை வைத்து மிரட்டி எடுத்துள்ளார் சஞ்சனா. இதையடுத்து, டீச்சரும், அவரது ஆண் நண்பரும் போக்சோவில் கைதாகி ஜெயிலில் உள்ளனர்.

    சென்னை தி.நகரை சேர்ந்தவர் சஞ்சனா. 28 வயதாகிறது.. இவர் ஒரு பட்டதாரி. வீட்டிலேயே டியூசன் சென்டர் ஒன்றை நடத்திவருகிறார். இதில், 10,11, 12ம் என 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு சஞ்சனாதான் பாடம் நடத்துகிறார்.

    இந்நிலையில், இவரது டியூஷன் மாணவி ஒருவர் கிளாஸ் முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அவரது முகம் களைப்புடன் காணப்பட்டது.. ஆடைகள் கலைந்திருந்தது.. முகமெல்லாம் அழுது வீங்கியிருந்தது... அந்த கோலத்தை பார்த்ததுமே பெற்றோர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. அதனால், மகளிடம் வந்து இதை பற்றி விசாரித்தனர்.

    பெட் ரூம்

    பெட் ரூம்

    அப்போது, டியூசன் டீச்சர் சஞ்சனாவும், அவரது ஆண் நண்பர் பாலாஜியும் தன்னை மிரட்டி உடன் படிக்கும் சக மாணவனுடன் பெட் ரூமில் ஒன்றாக இருக்க வைத்து படமும், வீடியோவும் எடுத்ததாக சொல்லி அழுதார். இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர், உடனடியாக மாம்பலம் அனைத்து மகளிர் போலீசுக்கு சென்று புகார் அளித்தனர்.

    பாலாஜி

    பாலாஜி

    அதன்படி போலீசாரும் டீச்சரையும், அவரது ஆண் நண்பர் பாலாஜியையும் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், டியூஷன் டீச்சரின் வண்டவாளம் தெரியவந்தது. அந்த டியூசன் சென்டரிலேயே படுக்கை அறை ஒன்றை இதற்கென ஸ்பெஷலாக ரெடி பண்ணி உள்ளார் சஞ்சனா.

    நிர்வாண வீடியோ

    நிர்வாண வீடியோ

    அழகாக இருக்கும் மாணவ, மாணவிகளை செலக்ட் செய்து, அவர்களை ஒன்றாக சேர்த்து அந்த பெட்ரூமில் நிர்வாணமாக நிற்க வைத்து டிசைன் டிசைனாக போட்டோக்களை எடுப்பாராம். இதைதவிர, அந்த மாணவ, மாணவிகளை ஒன்றாக இருப்பது போலவும் வீடியோவும் எடுப்பாராம். 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை டீச்சர் இப்படி நிர்வாணமாக வீடியோ, போட்டோ எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

    பணம் கறந்தார்

    பணம் கறந்தார்

    இது எல்லாவற்றிற்கும் மேல், அந்த ஆண் நண்பர் பாலாஜி, மிரட்டி எடுத்த அந்த வீடியோவை காட்டி அதே மாணவிகளை திரும்பவும் மிரட்டி தன்னுடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்துவாராம். யார் எல்லாம் மறுப்பு சொல்கிறார்களோ, அவர்களிடம் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவேன் என்று சொல்லி பணத்தையும் மாணவிகளிடம் தனியாக கறந்துவிடுவாராம்.

    போக்சோ

    போக்சோ

    இதையடுத்து டீச்சர் மற்றும் பாலாஜியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தால், அவ்வளவும் மாணவ, மாணவிகளின் நிர்வாண படங்களும், ஆபாச வீடியோக்களம் இருந்ததை கண்டு அதிர்ந்து போய்விட்டனர். பிறகு இருவரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதையடுத்து, எத்தனை மாணவ, மாணவிகளை இவர்கள் இருவரும் சேர்ந்து சீரழித்துள்ளனர், எவ்வளவு பணம் பறித்துள்ளனர் என்பதெல்லாம் இனிவரும் விசாரணையில்தான் தெரியவரும். பாடம் சொல்லி தரும் படித்த பெண்கள், ஆசிரியர்களை நம்பி டியூசனுக்கு அனுப்பினால் இந்த கதியா என்று பெற்றோர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+