தவெக வேட்பாளர் போட்டியிடவில்லையா? வீடியோவை காட்டி ஆதவ்க்கு பதிலடி கொடுத்த எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளரை, எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கியதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தனது பேட்டியின் போது விஜய் பேசும் வீடியோ ஒன்றையும் காட்டியுள்ளார்.

சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கியதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்தார். தவெக வேட்பாளராக அறிவித்த அருண்குமார், தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்த புகைப்படத்தையும் நேற்று மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காட்டி பேசியிருந்தார்.

Edappadi palaniswami Hits Back at Aadhav Arjuna With Video

ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பதில்

அதிமுக எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் செய்து தவெக விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்ததாக அதிமுக குற்றம் சாட்டி வரக்கூடிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். தவெக போட்டியிட்டு இருந்தால் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்கியிருக்க மாட்டார் என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பேட்டியின் போது விஜய் பேசிய வீடியோவை போட்டு காட்டினார். சட்டமன்ற தேர்தலின் போது பிரசாரத்தின் கடைசி நாளில் விஜய் சென்ன நந்தனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது, எடப்பாடி தொகுதியில், டிவி சின்னத்தை நாம் ஆதரிக்கிறோம்.

புகைப்படத்தை காட்டிய எடப்பாடி

ஆகவே, எடப்பாடி தொகுதி மக்களே டிவி சின்னத்தில் ஓட்டு போடுவது நம்ம விஷில் சின்னத்தில் நீங்கள் ஓட்டு போடுவது மாதிரி' என்று கூறிய காட்சிகளை காட்டினார். மேலும், எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட பிரேம்குமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் காட்டினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி, தவெக வேட்பாளர் இவர்தான் என்று விஜய் மேடையிலேயே பேசியிருக்கிறார்.

ஆனால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , எடப்பாடி தொகுதி வேட்பாளரை விலைக்கு வாங்கிவிட்டதாக தவறான செய்தியை பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். ஆக ஏற்கனவே தவெக சார்பாக விஜய் வேட்பாளர் நிறுத்தப்பட்டு அந்த வேட்பாளரும் வாக்குகளை பெற்று இருக்கிறார். தேர்தல் பிரசாரத்தை செய்த பிறகும் எடப்பாடி தொகுதி மக்கள் என்னை 98 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர் இதுதான் உண்மையான செய்தி" என்றார்.

எடப்பாடி தொகுதியில் நடந்தது என்ன?

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பாக அருண்குமார் என்பவரை விஜய் வேட்பாளாராக அறிவித்தார். இதன்படி, எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அருண்குமார் , வேட்பு மனு பரிசீலனை நாளன்று திடீரென மாயமானார். மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த அவரது மனைவியும் வேட்பு மனு பரிசீலனைக்கு வராத நிலையில், தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரேம்குமார் என்பவரை ஆதரிப்பதாக விஜய் அறிவித்தார். எடப்பாடி தொகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 148,933 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தவெக ஆதரவுடன் நின்ற பிரேம்குமார் 50,823 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+