ராகுல் காந்தி விஜய் உடன் கூட்டணி பற்றி பேசினாரா? போட்டு உடைத்த தவெக நிர்மல்குமார்!
சென்னை: 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக அண்மைக்காலமாக யூகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராகுல் காந்தியிடம் விஜய் கூட்டணி தொடர்பாகப் பேசினாரா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தல் ஆணையம், தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக சார்பில், எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி.ஆர் நிர்மல் குமார், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். தவெகவை காப்பாற்ற அதிமுகவால் மட்டும்தான் முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியது குறித்து சிடிஆர் நிர்மல்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "அவர்களுடைய நோக்கத்தை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். பிரதான எதிரி திமுகவை பற்றி பேசுவதை விட்டுவிட்டு எங்களைப் பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்கள் மறைமுகமாக திமுகவுக்கு உதவி செய்கிறார்கள். யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு அழைக்கலாம். ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அதிமுக என்ற ஆட்சியில் இல்லாத கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.
எங்கள் கொள்கை எதிரி பாஜக என ஏற்கனவே சொல்லிவிட்டோம். எனவே பாஜகவோடு இருக்கும் எந்தக் கட்சியோடும் கூட்டணி அமைக்க 1 சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் முதல்வர் வேட்பாளர் விஜய் தான்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "கூட்டணி குறித்து ராகுல் காந்தி விஜய்யிடம் பேசினார் என்பது புரளி. இப்படி நிறைய வதந்திகள் வருகின்றன. அப்படி பேசினால் நாங்கள் அதை பொதுவெளியில் தெரிவிப்போம். அதேபோல் கூட்டணி பேச்சு நடந்தால் பொதுவெளியில் தெரிவிப்போம்" எனத் தெரிவித்தார்.
-
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்!












Click it and Unblock the Notifications