5 திமுக எம்எல்ஏக்களுக்கு தவெக குறி.. பட்டியல் போட்டு தூக்கும் பனையூர்.. அதிர்ச்சியில் அறிவாலயம்
சென்னை: தேர்தலில் வெற்றி பெற்றாலும் தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இந்நிலையில் திமுகவின் 5 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு தவெக குறி வைத்திருப்பதால் அறிவாலயம் அதிர்ச்சியடைந்துள்ளது.
தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. வரவேற்கத்தக்க சில மாற்றங்கள் இருந்தாலும் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மீது விமர்சனங்களும் இருக்கின்றன. முக்கியமாக தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்காததால் மாற்று கட்சி எம்எல்ஏக்களை தவெகவில் இணைப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள்.

எம்எல்ஏக்கள் பேரம்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் தவெக வர தயாராகவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவில் அதிருப்தியாக உள்ளனர்.
அவர்கள் மூலம் 25 எம்எல்ஏக்களை இழுக்க தவெக காய் நகர்த்துகிறது. அதிமுகவில் உள்ள மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை தவெகவில் இணைக்க முயற்சித்து வருகிறார்கள். தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் நடத்தி அவர்களை திமுகவில் இணைக்க முயற்சி நடந்ததாக புகார் எழுந்தது. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டினாலும் வழக்கில் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை.
5 திமுக எம்எல்ஏக்களுக்கு குறி
விரைவில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவுள்ளது. அதற்கு தவெக திட்டம் வகுத்து வருகிறது. ஆட்சியை முழுமையாக தொடர தவெகவுக்கு 118 தொகுதிகளில் பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என உறுதியாக உள்ளனர். இந்நிலையில் அதிமுகவை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தவெக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவிடம் 59 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இதுகுறித்து பிரபல தமிழ் நாளிதழில் வெளியிட்டுள்ள செய்திபடி, "திமுகவில் பதவி பறிப்பு நடவடிக்கை, முன்னாள் அமைச்சர்கள் ஆதிக்கம் ஆகியவற்றால் பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் கட்சி மாறுவதற்கு தயாராக உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
