Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பூர், திருச்சி கிழக்கு, 2 தொகுதிகளிலும் விஜய்யின் வேட்புமனு ஏற்பு! பாமக எதிர்ப்பால் 30 நிமிடம் கெடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அவரது இரு வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். எனினும் பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்புமனுவுக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிரான ஆதாரத்தை அரை மணி நேரத்தில் தாக்கல் செய்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

vijay tvk election

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளுக்கு 7500- க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வரும் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேற்றுடன் முடிவடைந்தது.

வேட்புமனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் சீமான், உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். முதல் நாளில் மட்டும் 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

2ஆவது நாளில் 788 பேரும், 3 ஆம் நாளில் 2,069 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 3 நாட்களில் 3,430 வேட்புமனுக்கள் தாக்கலாகின. மொத்தம் 234 தொகுதிகளுக்கு 7600-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அதில் தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, விருதுநகர் விஜயபிரபாகரன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், வானதி சீனிவாசன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

அப்போது பெரம்பூர் தொகுதியின் தவெக வேட்பாளர் விஜய்யின் வேட்புமனுவை ஏற்பதாக அறிவித்தபோது பாமக தரப்பினர் , விஜய் மனுவை ஏற்க ஆட்சேபம் தெரிவித்தனர். அவர் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் சொத்துக் கணக்கை அதிகரித்துள்ளார். மேலும் வருமான வரியை செலுத்தவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆதாரம் கேட்ட போது அரை மணி நேரத்தில் ஆதாரத்துடன் வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு ஏற்கப்பட்டுவிட்டது. இதனால் தவெகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த 30 ஆம் தேதி விஜய் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் அவர் மீது காவல் துறையில் எந்த வழக்கும் இல்லை என தெரிவித்துள்ளார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கையும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இதை பெரம்பூரில் மனுதாக்கலில் குறிப்பிடவில்லை. இதையடுத்து எழும்பூரில் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். பழைய பிரமாண பத்திரத்தில் ரூ 1.10 லட்சம் ரொக்கம் இருப்பதாக கூறிய விஜய், புதிய வேட்புமனுவில் ரூ 2 லட்சம் கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அது போல் பழைய வேட்புமனுவில் நிறுவன பங்கு ரூ 19.03 லட்சம் என தெரிவித்துள்ள நிலையில் புதிய வேட்புமனுவில் ரூ 19.69 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். பழைய வேட்புமனுவில் டாடா கேரவன் வாகனத்தை விஜய் காட்டவில்லை, புதிய மனுவில் ரூ 6 கோடி மதிப்பிலான டாடா கேரவன் பேருந்து இருப்பதை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+