"My TVK" App: தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். My TVK எனும் செயலியை தொடங்கி வைத்தார் தவெக தலைவர் விஜய்.
சென்னை பனையூர் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் செயலியை தொடங்கி வைத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. கட்சியை வலுப்படுத்தும் வேலையில் களமிறங்கியுள்ள விஜய், உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பே இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய விஜய், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை நடத்தினார்.
தவெக லிங்க் மூலம் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து வந்த நிலையில் தற்போது புதிய செயலியை நிர்வாகிகளுக்காக விஜய் அறிமுகம் செய்து உள்ளார். இந்தச் செயலியில் அனைத்து தொகுதியின் வாக்காளர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தவெக நிர்வாகிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கு 2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை விஜய் நிர்ணயித்துள்ளார். இந்த செயலியின் Access மாவட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் அதில் உள்ள வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்க பணிக்கப்பட்டுள்ளனர்.
ஜியோ மேப்பிங் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதால் வேறு இடத்திலிருந்து உறுப்பினராக இணைக்க முடியாதவாறு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நிர்வாகிகள் பொதுமக்கள் இல்லத்திற்கு சென்றால்தான் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முடியும். இந்த செயலியில் உறுப்பினர் சேர்க்கை மட்டும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தரும் நபர்கள், கட்சியில் சேராமல் வெளியே இருந்து ஆதரவு தர நினைப்பவர்கள் போன்ற விவரங்களை வாக்குச்சாவடி முகவர்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளின் இல்லத்திற்கு விஜய் நேரில் சென்று கௌரவிக்கவும் முடிவு செய்துள்ளார். அதே போல் தவறான முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தவெக உறுப்பினர் சேர்க்கையை இன்று தொடங்கி வைத்துள்ளார் தவெக தலைவர் விஜய். உறுப்பினர் சேர்க்கைக்காக My TVK எனும் செயலியை தொடங்கி வைத்துள்ளார் தவெக தலைவர் விஜய். செயலியை தொடங்கி வைத்த பின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார்.
-
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications