நம்ப வச்சு கழுத்தறுத்து.. அவங்களுக்கு மட்டும் உடனே போஸ்டிங்! கொந்தளிப்பில் மாஜிகள்! ரெடியாகும் படை!

Subscribe to Oneindia Tamil

2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் அந்த கட்சியில் இருந்து பலரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவினர். இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 90% பேருக்கு இன்னும் பேசியபடி பொறுப்புகள் வழங்கப்படாததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். இதனால், அவர்கள் விரைவில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து முறையிட திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பைக்கிளப்பி இருக்கிறது.

2026 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் கருத்து வேறுபாடுகளால் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் மாநில பொறுப்புகளில் இருந்து நிர்வாகிகள் என பல பேர் விலகி தவெக-வில் இணைந்தனர்.

TVK Leaders

அவர்களுக்கு விரைவில் உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் நெருங்கிவிட்ட நிலையில் தற்போது வரை பலருக்கும் பேசியபடி பொறுப்புகள் வழங்கப்படாததால் கடுமையான மன அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

முன்னாள் அமைச்சர்கள்

மிக சமீபத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலருக்கு பதவி வழங்கியிருந்தாலும் பல முக்கிய நிர்வாகிகளுக்கு இன்னும் எந்த பொறுப்பும் வழங்கப்படாத காரணத்தால் கடும் ஏமாற்றத்தில் இருக்கிறார்களாம். குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான எம் சி சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி, எஸ் வளர்மதி, எம்எஸ்எம் ஆனந்தன் உள்ளிட்டோரும் இணைந்த நிலையில் அவர்களுக்கு இன்னும் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

புஸ்ஸி ஆனந்த்

இதனால் பேசியபடி பொறுப்புகள் கிடைக்குமா கிடைக்காதா என்று கடும் மன வருத்தத்தில் இருக்கிறார்களாம். இது சம்பந்தமாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பலமுறை நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் சந்தித்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லையாம். பார்க்கலாம் பார்க்கலாம் விரைவில் தலைவரிடம் பேசி விட்டு நல்ல பதில் வரும் நல்ல அறிவிப்பு விரைவில் வரும்.. நீங்கள் எதிர்பார்த்த அந்த நல்ல செய்தி அறிக்கையாக இந்த வாரம் வந்து விடும்.. என்று ஒவ்வொரு வாரமாக கதை சொல்லி வருகிறாராம்.

சிங்கை ராமச்சந்திரன்

இதனால் கடுப்பாகி இருக்கும் முன்னாள் அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது மனக்குமுறலை வெளியிட திட்டம் தீட்டி வருகிறார்கள். இதற்கிடையே மிகச் சமீபத்தில் அதிமுக மாணவரணி செயலாளராக இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரனுக்கு கூட விரைவில் Tamil Nadu Startup and Innovation Mission (TANSIM) நிறுவனத்தின் CEO பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சிப் பொறுப்புகள்

ஆனால், தங்கள் பதவி குறித்து இன்னும் அறிக்கை இன்னும் வராத நிலையில், இப்படியே நாம் இதற்கு மேலும் சும்மா இருந்தால் சரியாக வராது என்று கொந்தளிப்பில் இருக்கிறார்களாம். இதனால் விஜய்யை சந்திக்க தயராகிறார்களாம். மேலுள்ள பட்டியல் மட்டுமல்லாது விடுபட்டோர் பட்டியலில், பாலகங்கா, நீலகிரி கப்பச்சி வினோத், பச்சைமால், மாநில வர்த்தகர் அணி தலைவர் கே.என். ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் து.கொறடா சு.ரவி (அரக்கோணம்), அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோரும் உள்ளனர்.

தொழிற்சங்கம்

தவெகவில் இன்னும் தொழிற்சங்கம் தொடங்கப்படவில்லை.. தொழிற்சங்கம் தொடங்கினால் அதில் பங்கேற்று பணியாற்ற ஏராளமான நிர்வாகிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பலரும் ஏற்கனவே அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+