புரட்டியெடுக்கும் புள்ளிகள்.. விளாசித் தள்ளிய கட்சிகள்! விஜய் தரப்பு ஹேப்பி .. இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்ற நிலையில் அங்கு திரண்ட கூட்டத்தால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் விஜய். அதே நேரத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என தமிழகத்தின் ஒட்டுமொத்த கட்சிகளும் தன்னைப் பற்றியே பேசி வருவதால் அதைவிட உற்சாகத்தில் இருக்கிறதாம் விஜய் தரப்பு.

2021 தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டனர். அதே நேரத்தில் தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் இதுவரை கள அரசியலுக்கு முழுமையாக வரவில்லை என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே இருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியை ஆரம்பித்தாலும் இரண்டு அல்லது மூன்று பொது நிகழ்வுகளில் மட்டுமே விஜய் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கள அரசியல் பயணத்தை தீவிர படுத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

TVK Madurai Manadu

விஜய் அரசியல்

அதற்காகவே திட்டமிடப்பட்டது தான் மதுரை மாநாடு. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் தேர்ந்தெடுக்க விஜய்க்கு பல காரணங்கள் இருக்கிறது. ஒன்று வட மாவட்டத்தில் முதல் மாநில மாநாட்டினை நடத்திய நிலையில் இரண்டாவது மாநாட்டை தென் மாவட்டங்களில் நடத்த வேண்டும் என்பது விஜயின் திட்டம். மதுரையில் ஆட்சி மாற்றத்திற்கு முன்னதாக நடைபெற்ற மாநாடுகள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. அது தேர்தலிலும் எதிரொலிக்கும். அதனால் தான் விஜய் மதுரையை தேர்ந்தெடுத்தார்.

மதுரை மாநாடு

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 15 லட்சம் பேர் வரை திரண்டதாக கூறுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள். மாநாட்டை விட விஜயின் பேச்சு தான் தமிழக அரசியலில் தற்போது வரை பேசு பொருளாக இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என விமர்சித்தது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தது, அதிமுக குறித்த பேச்சு என அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய்.

தமிழக அரசியல்

அன்றிலிருந்து இன்று வரை பாஜக, அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆதரவாளர்கள் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை பொது வழிகளில் எடுத்து வைத்து வருகின்றனர். குறிப்பாக திமுகவும் அதிமுகவும் விஜய் மற்றும் அவரது கருத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநாட்டின் போது கூட்டத்தை பார்த்து விஜய் நெகிழ்ந்து போனார். அது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது.

அரசியல் எழுச்சி

இந்த நிலையில் மாநாடு முடிந்து சில நாட்கள் கழித்தும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தன்னை பற்றி தான் பேசுவதை விஜய் தரப்பு இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மூலம் கேட்டு தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதள பொறுப்பாளர்களும் விஜய் குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பேசும் தலைவர்களின் பேச்சுகளை விஜய்க்கு கொடுத்து இருக்கின்றனர். எது எப்படியோ பாசிட்டிவாக இருந்தாலும், நெகட்டிவாக இருந்தாலும் தங்களைப் பற்றி தான் தமிழக அரசியலில் ஒரு வாரத்திற்கு பேச்சு இருக்கும் என்பதால் அடுத்தடுத்து அரசியல் அட்டாக்கை விஜய் தொடுக்க இருப்பதாக கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+