ஒரே செல்போன் எண்ணில் 5 பேர் உறுப்பினர்.. தவெக செயலியில் இப்படியொரு ட்விஸ்ட்.. விஜய் பேச்சின் பின்னணி
சென்னை: தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்துள்ள புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி ஒரே செல்ஃபோன் எண் மூலமாக 5 பேரை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் செல்ஃபோன் எண் மூலமாக அந்த குடும்பத்தையே தவெகவின் உறுப்பினராக காட்ட முடியும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் 2ஆம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைத்துள்ளார். புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக தவெக சார்பாக My TVK என்ற புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதன் மூலமாக ஒவ்வொரு தெருவாகச் சென்று, குடும்பம் குடும்பமாக தவெகவுக்கு உறுப்பினர்களைச் சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவெகவில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது அக்கட்சி தலைமையால் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் விஜய் பேசுகையில், தொடர்ந்து வெற்றி பெற்றவர்களின் அதிகார பலத்தை உடைத்து 1967 மற்றும் 1977 ஆகிய தேர்தலில் புதிய கட்சியினர் ஆட்சிக்கு வந்தார்கள். அதுபோல் 2026 சட்டசபைத் தேர்தல் அமையும். மக்களுடன் செல், மக்களுடன் வாழ் என்று அண்ணா கூறினார்.
அவர் கூறியதைச் செய்தாலே போதும். அண்ணா வழியில் செல்வோம். வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு எல்லோரையும் சந்தித்தவர்களே வென்றுள்ளனர். அடுத்ததாக மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு பயணம் என்று தொடர்ச்சியாக மக்களுடன் இருக்க போகிறோம் என்று தெரிவித்தார். இதனிடையே தவெக செயலி குறித்த சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
அதாவது திமுக தொடங்கிய ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் மூலமாக உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதில் திமுகவில் இணைய ஒவ்வொரு நபரிடமும் செல்ஃபோன் மூலமாக ஓடிபி கேட்கப்பட்டு, உறுப்பினராக சேர்க்கப்பட்டு வந்தார்கள். ஆனால் தவெக செயலியில் எந்த ஓடிபியும் கேட்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தவெக செயலியில் ஒரேயொரு செல்ஃபோன் எண் மூலமாக 5 நபர்களை உறுப்பினராகச் சேர்க்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குடும்பத்தில் உள்ள ஒரேயொரு நபரின் செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி எளிதாக அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தவெக கட்சி உறுப்பினர்களாகச் சேர்க்க முடியும்.
இதனால் எளிதாக 50 லட்சம் செல்ஃபோன் எண் இருந்தாலே, அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் தவெக உறுப்பினர்களாகக் காட்ட முடியும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. தவெக நிர்ணயித்த இலக்கையும் எட்ட முடியும். இதன் மூலமாக தவெக நிர்வாகிகளின் குடும்பத்தினரைக் கட்சி கட்டமைப்புக்குள் கொண்டு வருவதே அக்கட்சியின் இலக்காக இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. விஜய் "குடும்பம் குடும்பமாக" என்று சொல்வதன் பின்னணியின் இதுதான் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
-
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!












Click it and Unblock the Notifications