தவெகவின் அடுத்த பூத் கமிட்டி மாநாடு.. சுற்றுப்பயணத்திற்கு முன் விஜய் போட்ட திட்டம்.. எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வேலூரில் பூத் கமிட்டி மாநாடு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 15 முதல் தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், அதற்கு முன்பாக 4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த விஜய் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு தவெக செயற்குழு கூட்டத்தில் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நடத்தி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து விஜய் பணியாற்றி வரும் நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ள விஜய், இன்னும் ஒரு மாதத்தில் தமிழ்நாடு சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

TVK to Hold Booth Committee Conference in Vellore Ahead of Vijay s Statewide Tour

இதனை தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் உறுதி செய்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாக விஜய் மற்றொரு கட்சி பணிகளில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. ஜூலை 4ஆம் தேதி தவெக செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தவெக அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் விஜயின் சுற்றுப்பயணம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளது. அதேபோல் நிர்வாகிகள் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையும் அளிக்கப்பட உள்ளது. ஆனால் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக மீதமுள்ள 4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.

ஏற்கனவே கோவையில் பூத் கமிட்டி மாநாடு 2 நாட்கள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடமாவட்டங்களில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த விஜய் முடிவு எடுத்திருக்கிறார். இதற்காக வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. தற்போது வேலூர் மாவட்டத்தை விஜய் தேர்வு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு ஜூலை 4ஆம் தேதி செயற்குழு கூட்டத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவில் இளைஞர்கள் பலருக்கும் தேர்தல் பணியாற்றும் அனுபவம் முதல்முறை என்பதால், என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதை ஒரு கருத்தரங்காக நடத்தி வருகின்றனர். சிடி நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் தலைமையில் இந்த கருத்தரங்குகள் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+