Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவர் சிலைக்கு அருகில் நின்று.. தவெக வாழ்க என்று கோஷமிட்ட புஸ்ஸி.. கடுப்பான ஜெயந்தி ஏற்பாட்டாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில் அவருக்கு பலரும் இன்று மரியாதை செலுத்தினர். இதையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மரியாதை செய்தார். அப்போது நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில் அவருக்கு பலரும் மதுரையில் மரியாதை செய்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டில் இருந்தபடியே மரியாதை செய்தார்.

TVK Vijay

பனையூர் வீட்டில் இருந்தபடியே அவர் மரியாதை செய்தார். அதன்பின் அவர் செய்த போஸ்டில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்., என்று கூறினார்.

தேவர் ஜெயந்தியை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மரியாதை செய்தார். அவருடன் அக்கட்சி நிர்வாகிகள் இன்று மரியாதை செலுத்தினர்.

புஸ்ஸி ஆனந்த் மரியாதை சர்ச்சை

புஸ்ஸி ஆனந்த் தேவர் சிலைக்கு மரியாதை செய்த போது நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி புஸ்ஸி ஆனந்த் தேவர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு.. தேவர் வாழ்க.. தேவர் வாழ்க என்று சொல்லாமல் தவெக வாழ்க.. தவெக வாழ்க.. என்று கோஷமிட்டனர். புஸ்ஸி ஆனந்த் தவெக வாழ்க.. என்று சொன்னவுடன் கட்சி நிர்வாகிகளும் தவெக வாழ்க.. என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து கோபம் அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. கீழ இறங்கி வாங்க என்று கடுப்பாகி அழைத்தனர். தேவருக்கு மரியாதையை செய்துவிட்டு தேவரை வாழ்த்தாமல் அங்கேயும் போய் தவெகவை வாழ்த்தியது சர்ச்சையாகி உள்ளது.

தவெக வழக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பொது இடங்களில் TVK.. TVK.. என்று கத்துவது வழக்கம். அது விஜய் நடத்தும் கூட்டங்களில் அதிகமாக இருக்கும். விஜய் வரும் போது, போகும் போதெல்லாம் அதிகமாக TVK.. TVK.. என்று கத்துவார்கள். இது பொதுவாக எல்லா கட்சிகளிலும் நடப்பதுதான்.

ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஒரு கட்டம் மேலே போய் மற்ற கட்சிகளின் கூட்டங்களிலும் போய் இதேபோல் கத்துவது வழக்கமாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் காரில் வேகமாக செல்லும் போது கூட வெளியே சாலையில் நின்று பெரிதாக யாருக்கும் கேட்காதபடி.. கேமராவில் மட்டும் ரெக்கார்ட் ஆகி ரீல்ஸ் போட வசதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் TVK TVK என்று கத்துவது வழக்கமாகி வருகிறது.

இப்டி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் TVK TVK என்று கத்துவது பல இடங்களில் தொடர்கிறது. சமீபத்தில் சர்வதேச அளவில் பிரபலமான யூ டியூபர் speed வீடியோவில் இதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் TVK TVK என்று கத்தினார்கள். அதற்கு speed அப்படி என்றால் என்ன என்று கேட்க.. விஜய்.. விஜய்.. சி.எம் ஆப் இந்தியா என்றெல்லாம் தவெக நிர்வாகிகள் உளறியதுதான் மிச்சம். இந்தியாவிற்கு சி.எம் போஸ்ட்டா.. என்னங்க சொல்றீங்க என்று கேட்கும் அளவிற்கே அந்த அரசியல் முழக்கம் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் தேவர் ஜெயந்தியிலும் இதேபோல் கோஷமிட்டது சர்ச்சையாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+