நர்ஸ் போராட்டம், ஆசிரியர் போராட்டம் எல்லாம்.. சைடுல போகட்டும்! ஜனநாயகனில் பிஸியான விஜய்.. அடப்போங்க
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டில் பிசியாக இருக்கிறார். படத்தின் ப்ரோமோஷனில் பிஸியான அவர்.. தமிழ்நாட்டில் தினம் தினம் நடக்கும் பல முக்கிய விஷயங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி உள்ளார்.
அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த 18 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

நர்ஸ்கள் போராட்டம் - தவெக காணவில்லை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் சுமூக தீர்வு காணப்படவில்லை. பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில கோரிக்கைகளை ஏற்று அறிவிப்பினை வெளியிட்டார். அதனையும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால் சென்னையில் இருந்து அவர்களை போலீசார் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கூடுவாஞ்சேரி நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் அவர்களை போலீசார் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
10 அரசு பஸ்களில் ஏற்றப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருச்சி, மதுரைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர்கள் வழியிலேயே சிலர் இறங்கினார்கள். இந்த விவகாரத்தில் விஜய் எந்த கருத்தும் சொல்லவில்லை. விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. விஜய் எதுவும் பேசவில்லை. ஒரு வீடியோ கூட வெளியிடவில்லை. ஜனநாயகன் ப்ரோமோஷனில் பிஸியான விஜய்.. இதை பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டம்
கடந்த டிசம்பர் 22ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் முன்வைத்த பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்து உள்ளன. சென்னை எழிலகத்தில் 4-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எழிலகத்தை முற்றுகையிட முயன்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடை நிலை ஆசிரியர்கள் சென்னையில் 4-வது நாளாக போராட்டம் செய்து வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் 4 நாட்களாக போராட்டம் நடந்தும் இந்த விவகாரத்தில் விஜய் எந்த கருத்தும் சொல்லவில்லை. விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.
விஜய் எதுவும் பேசவில்லை. ஒரு வீடியோ கூட வெளியிடவில்லை. இதிலும் கருத்து சொல்லாமல் ஜனநாயகன் ப்ரோமோஷனில் பிஸியான விஜய்.. தமிழ்நாட்டில் தினம் தினம் நடக்கும் பல முக்கிய விஷயங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி உள்ளார்.
விஜயின் கடைசி படமாக இது இருந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலிலும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். இளம் அரசியல் தலைவர் ஒரு seasoned அரசியல்வாதியாக இருப்பார் அதை செய்யாமல் சீசனுக்கு சீசன் மட்டும் அரசியல் செய்யும் தலைவராக உருவெடுத்து உள்ளார். ஏற்கனவே திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி விஜய் பேசவில்லை, வடஇந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் நடக்கும் தாக்குதல் பற்றி பேசவில்லை, ஆணவக்கொலைகள் பற்றி பேசவில்லை.. இப்படி தொடர்ந்து ஒதுங்கியே இருக்கும் விஜய்.. எப்போது உண்மையில் தீவிர அரசியலில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications