டி.கே.சிவகுமாரை.. இங்க கூப்பிட்டு வாங்க விஜய்! கொந்தளிக்கும் விவசாயிகள் சங்கம்!
சென்னை: காவிரி நீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, முதல்வர் விஜய் கர்நாடாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் விஜய் கர்நாடாக செல்கிறார் எனில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை தமிழகத்திற்கு அழைத்து வந்து, காவிரி படுகையின் வறட்சியை அவருக்கு காட்ட வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர் விவகாரம்
தமிழகத்திற்கு ஜூன் மாதம் தொடங்கி ஜூலை வரை மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீரை கார்நாடாக விடுவித்திருக்க வேண்டும். இப்போது வரை வெறும் 3.54 டிஎம்சி அளவுக்குதான் தண்ணீரை கொடுத்திருக்கிறது. போதுமான அளவுக்கு நீர் இல்லாததால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் முற்றிலுமாக வறட்சியடைந்திருக்கின்றன.
முன்னதாக நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 3500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு 4.5 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை கர்நாடகா பின்பற்றவில்லை. மேல் முறையீடு செய்கிறோம் என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டது.
மறுபுறம், முதல்வர் விஜய்க்கு, டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்திருக்கிறார். காவிரி ஆற்றுப்படுகையை வந்து பார்வையிடவும், காவிரி நீர் குறித்து பேசவும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இப்படி இருக்கையில்தான் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு போக கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
