சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

TVS நிறுவனத்தின் INTUC தொழிற்சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் கொரோனா நிவாரண நிதி.. நெகிழ்ந்த முதல்வர்..!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக ஒசூரில் இயங்கி வரும் டி.வி.எஸ். நிறுவனத்தின் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் ரூ.25 லட்சத்துக்கான காசோலை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி உள்ள சூழலிலும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்து தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன. இதனிடையே கொரோனா நிவாரண நிதியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கி உண்டியலில் உள்ள சேமிப்பை வழங்கும் பிஞ்சுக்கள் வரை அரசுக்கு நிதியுதவி குவிந்து வருகிறது.

Tvs industries employees union give 25 lakh corona relief fund to Cm stalin

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இயங்கி வரும் டி.வி.எஸ். குழும நிறுவனத்தின் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகி குப்புசாமி, கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பெரும் முதலாளிகளே கணக்கு பார்த்து நிவாரண நிதி வழங்கும் சூழலில், தொழிற்சங்கம் ஒன்று இவ்வளவு பெரிய தொகையை நிவாரண நிதியாக வழங்கியதை எண்ணி முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டும், நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

 திசையன்விளை, வள்ளியூரில் கொரோனா சிகிச்சை மையங்கள்.. திறந்து வைத்த ஸ்டாலின்.. கிராம மக்களுக்கு பலன் திசையன்விளை, வள்ளியூரில் கொரோனா சிகிச்சை மையங்கள்.. திறந்து வைத்த ஸ்டாலின்.. கிராம மக்களுக்கு பலன்

இதனிடையே இது தொடர்பாக தெரிவித்த ஒசூர் டி.வி.எஸ். நிறுவன தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமி, தொழிலாளர்கள் தாமாக முன்வந்து இந்த தொகையை அளித்ததாகவும், தமிழகத்திலேயே தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு கொரோனா நிவாரண நிதி வழங்கிய பெருமை டி.வி.எஸ். தொழிற்சங்கத்தையே சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.

English summary
Tvs industries employees union give 25 lakh corona relief fund to Cm stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X