சென்னையிலும் நுழைந்தது HMPV வைரஸ்- 2 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி! நாடு முழுவதும் 5 பேர் பாதிப்பு!
சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் சீனாவின் HMPV வைரஸ் சென்னையில் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் 2 , குஜராத்தில் 1 குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளையே பெரும் துயரத்துக்குள்ளாக்கியது. பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக் கூடிய ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் HMPV என்ற புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளாமலேயே குழந்தைகளைத் தாக்கக் கூடியதாக இருக்கிறது HMPV வைரஸ்.
இந்தியாவிலும் HMPV வைரஸ் பாதிப்பு தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் முதலில் கர்நாடகா மாநிலத்தில் 3 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து 8 மாத குழந்தைக்கும் கண்டறியப்பட்டது. இதேபோல குஜராத்தில் ஒரு குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியானது.
இந்த நிலையில் சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புடன் வந்த 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த HMPV வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளைப் போல முதியவர்களையும் HMPV வைரஸ் தாக்கக் கூடியது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications