"நாலே நிமிஷம்".. வெண்ட்டிலேட்டரில் என்ன நடந்தது.. துடிதுடித்து இறந்த 2 பேர்.. சென்னையில் ஷாக்!
சென்னையில் கொரோனா நோயாளிகள் 2 பேர் உயிரிழந்தனர்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வெண்டிலேட்டர் பழுது அடைந்ததால் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Recommended Video

கொஞ்ச நாளாகவே தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது.. தொற்று நோயாளிகளும் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே வருகிறது.. முன்பைபோலவே, இப்போதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதாக தெரிகிறது.
அதனால் பாதிக்கப்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.. இதனால், வெண்டிலேட்டர் பற்றாக்குறைகளும் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐசியூ
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மொத்தமாக 82 நபர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்... ஆனால், அங்கிருந்த வெண்டிலேட்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டதாகவும், அதன்காரணமாக ஐசியுவில் இருந்த 2 பேர் இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

4 நிமிடங்கள்
அதாவது, நடுராத்திரி 12.20 மணிக்கு மொத்தம் 4 நிமிடங்கள் அந்த வெண்டிலேட்டரில் கோளாறு ஏற்பட்டுள்ளது.. இதனால் ஆக்சிஜன் சப்ளை டக்கென நின்றுவிட்டதால், போதுமான அளவு பிராண வாயு வராததால் வெண்டிலேட்டர் சிகிச்சை பெற்று வந்த 50 வயது பெண், 62 வயது ஆண் நோயாளி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த 50 வயது பெண் ஏற்கனவே பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று, அங்கு முடியாமல் போகவேதான் இங்கு அனுமதிக்கப்பட்டார்..

கோளாறு
அதேபோல, உயிரிழந்த 62 வயது நிரம்பிய ஆணும், உடம்பில் பல்வேறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, பல நாட்களாகவே இங்கு சிகிச்சையில் இருந்தவராம். வெண்டிலேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவர்கள் உயிரிழந்துள்ளனர்.. இந்த தகவலை அதிகாரபூர்வமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வரே தெரிவித்திருக்கிறார்.. எனினும் இதுகுறித்த முறையான விளக்கத்தை அவர் தந்துள்ளார்.

ஆக்சிஜன்
ஆக்சிஜன் சப்ளையில் அழுத்த மாறுபாடு இருந்ததே தவிர ஆக்சிஜன் தடை ஏற்படவில்லை என்றும், ஆக்சிஜன் குறைபாடு இருந்திருந்தால் அனைத்து நோயாளிகளும் இறந்திருப்பார்கள், உயிரிழந்த 2 நோயாளிகள் ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது வெண்டிலேட்டர் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டதால், மற்ற நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்படுவதாகவும் கூறியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications