'பிறந்தநாள் பரிசு' என வந்த பார்சல்.. திறந்தபோது ஆடிப்போன அதிகாரிகள்.. சென்னையில் என்ன நடக்கிறது?
சென்னை: 'பிறந்த நாள் பரிசு' என்ற பெயரில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கொரியா் பார்சலில்போதை மாத்திரைகள் வரவழைத்த ஓவியக் கலைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்புடைய போதைப் பொருட்களை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர்.
சென்னை பழைய விமான நிலையத்திற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று வந்தது.அதில் வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது புதுச்சேரி மாநிலம் ஆரோவில் நகரில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு பாா்சல் வந்திருந்தது.
உள்ளே பிறந்தநாள் பரிசுகள் இருப்பதாக பார்சலின் மேல் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அந்த பாா்சலை திறந்து பார்த்து சோதனையிட்டனா்.

பார்சலில் வந்த போதை மாதிரிகள்
அப்போது அதில் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பாா்சலில் 994 போதை மாத்திரைகளும்,249 போதை ஸ்டாம்புகளும் இருந்தன.அதன் சா்வதேச மதிப்பு ரூ.56 லட்சமாகும். இதனை தொடர்ந்து போதை மாத்திரைகள்,போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனா். இதனையடுத்து அந்த பாா்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த ஆரோவில் நகரில் உள்ள முகவரிக்கு சுங்கத்துறையின் தனிப்படையினா் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

நெல்லையை சேர்ந்தவர்கள்
அங்கு அந்த முகவரியில் திருநெல்வேலியை சோ்ந்த ரூபக் மணிகண்டன்(29), லாய் விகூஸ்(28) ஆகிய 2 பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவா்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனா்.அங்கு இரு பாா்சல்களில் ரூ.2.5 லட்சம் மதிப்புடைய 5.5 கிலோ கஞ்சா போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஓவிய கலைஞா்கள்
விசாரணையில் அந்த வாலிபர்கள் இருவரும் இயற்கை ஓவிய கலைஞா்கள் என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரும் இதேபோல் வெளிநாடுகளிலிருந்து போதை மாத்திரைகள்,போதை ஸ்டாம்புகள் வரவழைத்து கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்தும் கஞ்சா போதைப்பொருளையும் வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளனா்.

கைது செய்தனர்
இதையடுத்து இருவரையும் சுங்கத்துறை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா். அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள்,போதை ஸ்டாம்புகள்,கஞ்சா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் சென்னை ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications