திமுகவில் இளைஞரணி, மாணவரணி இருப்பதை போல் பாஜகவில் வருமான வரித்துறை அணி இருக்கு -உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திமுகவில் இளைஞரணி, மாணவரணி இருப்பதை போல் பாஜகவில் வருமான வரித்துறை அணி, அமலாக்கத்துறை அணி என சார்பு அணிகள் இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடைபெறும் வருமான வரி சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம் என கேசுவலாக பதிலளித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே பாஜகவின் சார்பு அணிகளாக செயல்படும் வருமான வரித்துறை அணியும், அமலாக்கத்துறை அணியும் தீவிரமாக செயல்படுகிறது என தனக்கே உரிய பாணியில் விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் இல்லங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில் எவ வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதனால் தான் இந்த இரண்டு அமைப்புகளையும் பாஜகவின் சார்பு அணி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதனிடையே அமைச்சர் எ.வ.வேலு வீட்டிற்கு திமுக தலைமைக்கழகம் சார்பில் சென்ற ஆர்.எஸ்.பாரதி, இன்று மாலை ஐடி ரெய்டு பற்றி பிரஸ்மீட் கொடுப்பார் எனத் தெரிகிறது.
நீட் விலக்கு நம் இலக்கு என்ற முழக்கத்துடன் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் முயற்சியில் இறங்கியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு சென்று கே.எஸ்.அழகிரி உட்பட காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்களிடம் கையெழுத்து பெற்றார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் தாம் நேரில் சந்திப்பேன் எனக் கூறியிருக்கிறார். நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 22 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் திமுக அரசு முன்னெடுத்து வருவதாக கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலினை சொன்னதை போல் திமுகவின் பிரச்சாரத்துக்கும், அடையவிருக்கும் வெற்றிக்கும் ஆளுநர் ரவி தான் சவுகரியமானவர் என்றும் இதனால் ஆளுநரை மாற்ற வேண்டாம் எனவும் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications