சோபா மாடல் விவகாரம்! அன்பிற்குரியவர் உதயநிதி.. விசிகவை சொல்லியிருக்க மாட்டார்! திருமாவளவன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அரசை சோபா மாடல் அரசு என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக தொல் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், "அவர் என்னுடைய அன்பிற்குரியவர்.. மதிப்பிற்குரியவர்.. ஆனால் இதை வைத்து அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார். எங்க கட்சிக்கு வந்த சோபாவை வைத்து அவர் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை. அதிமுகவுக்கு சோபா போன பிறகு அதை வைத்து அவர் சொல்லியிருக்கலாம்.." என்று கூறியுள்ளார்.

விசிக தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சிஎம் 2031 என்ற பதிவெண் கார் குறித்தும், உதயநிதி ஸ்டாலின் சோபா மாடல் அரசு என விமர்சிப்பது குறித்தும் விளக்கமாக பேசினார். தொல் திருமாவளவன் கூறியதாவது:-

Udhayanidhi Stalin is well-liked person He wouldn t Mention against the VCK says Thirumavalavan

அன்பிற்குரியவர், மதிப்பிற்குரியவர்..

சோபா மாடல் என்பது கடுமையான குற்றச்சாட்டு கிடையாது. மக்களால் புறந்தள்ளப்பட்ட ஒரு விமர்சனம். யாராவது இந்த காலத்தில் போய் சோபாவில் வைத்து காசு கொடுப்பாங்களா?.. சினிமாவில் ஒரு காட்சியில் வந்தது.. அதை இந்த அரசின் மீது விமர்சனமாக வைப்பதாக நினைத்துக்கொண்டு மக்களால் ஏற்க முடியாத குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு இருக்கிறார். அவர் என்னுடைய அன்பிற்குரியவர்.. மதிப்பிற்குரியவர்.. அவ்வளவு தான்.

நான் என்ன நினைக்கிறேன் என்றால், அன்றைக்கு அதே நேரத்தில் அதிமுகவில் இருக்கும் ஒரு குழுவினருக்கும் அதே போன்று ஒரு சோபா போனதாக சொல்கிறார்கள். எனக்கு தெரியாது நான் பார்க்கவில்லை. எங்க அலுவலகத்தில் நாங்க ஏற்கனவே புதுப்பித்துக் கொண்டு இருக்கிறோம். உட்கார இடமில்லை. நாற்காலிகள், சோபாக்கள் கட்சி பொறுப்பாளர்கள், பசங்க டொனேஷனாக கொடுப்பாங்க.. அந்த மாதிரி யாரோ ஒருத்தர் ஆர்டர் பண்ண்யிருக்காங்க.. அது தான் அன்றைக்கு வந்தது. அவ்வளவு தான்.

விசிகவை சொல்லியிருக்க மாட்டார்

ஆனால் இதை வைத்து அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் என்று தான் நான் நினைக்கிறேன். எங்க கட்சிக்கு வந்த சோபாவை வைத்து அவர் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை. அதிமுகவின் ஒரு குழுவிற்கு போன சோபாவை வைத்து தான் அவர் சொல்லியிருக்க வாய்ப்பு உள்ளது. எப்படியாக இருந்தாலும் அந்த விமர்சனத்தை மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். அது வந்து எடுபடாத ஒரு விமர்சனம்.. அவ்வளவு தான்" என்று பதில் அளித்தார்.

கார் விவகாரம் எனக்கே தெரியாது

ஊடகங்களில் வந்த பிறகு தான் எனக்கே தெரியும். நான் அந்த நிகழ்ச்சியில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் என்ற அமைப்பு அல்லது நிறுவனம் ஒரு சமூக நீதியின் சகாப்தம் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் யார் யார் பங்கேற்றார்கள் என்பது எல்லாம் எனக்கே அங்கு சென்ற பிறகு தான் தெரியும். நானும் ஒரு பார்வையாளர் போல தான் பங்கேற்க போனேன்.

அப்போது அரங்குக்கு சென்ற போது, வாசலில் வந்தை என்னை அந்த காரில் ஏறுமாறு கூறினர். ஏறி வந்தேன். அவ்வளவு தான். ஒரு ஷூட்டிங் பர்போஸ்.. அவங்க ஒரு காட்சி பதிவுக்காக அதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த வண்டி ஜாக்குவார் கார் தான். டெஸ்லா கிடையாது. ஆனால் அந்த மாதிரியான ஒரு லோகோ வைத்ததாக சொல்கிறார்கள். அந்த வண்டியில் என்ன எண் உள்ளது என பார்த்துவிட்டா ஏறுவோம். இரவு நேரத்தில் அது நமக்கு தெரியாது.

வன்மம் பிடித்த கும்பல்

இதன் பிறகு ஊடகங்களில் வந்ததை பார்த்துவிட்டு நான் கேட்டேன். அப்போது அண்ணா இது ஷூட்டிங் ஸ்பாட்டில் பண்ணலாம். ஏற்கனவே அப்படி பல நிகழ்வுகள் நடந்து இருக்கு. அதையெல்லாம் விசாரித்துவிட்டு தான் நடத்தியிருக்கிறோம் என்று சொன்னார்கள். வழக்கம் போது வன்மம் பிடித்த கும்பல் இதற்கு என ஒரு நேரம் செலவழித்து இதை செய்து இருக்கிறார்கள். இது வழக்கம் போல் ஒன்று தான். என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+