தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை சந்திக்கும் உதயநிதி! ஃபைனல்ஸுக்கு களமிறங்கும் துணை முதல்வர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு முதல்வர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த உதயநிதி சுற்றுப்பயணம் செல்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, திமுக ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு மலர்ந்தது. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின், விடியல் பயணம், ரூ 1000 உரிமைத் தொகை, உங்களுடன் ஸ்டாலின், நான் முதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

udhayanidhi stalin dmk tamil nadu assembly election 2026

இந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அதிலும் விடியல் பயணம், ரூ 1000 உரிமைத் தொகை ஆகிய திட்டங்களில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் மிச்சமானதுடன் மாதம் ரூ 1000 மாதந்தோறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பல்வேறு கொலை, கொள்ளை, பலாத்காரம், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை லிஸ்ட் போட்டு அதிமுக கடுமையாக விமர்சிக்கிறது.

இன்னும் சட்டசபை தேர்தலுக்கு 7 மாதங்களே உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அது போல் தமிழக பாஜகவும் அடுத்த ஆண்டு தேர்தலில் கணிசமான இடங்களை பெற வியூகம் வகுத்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவும் தேர்தல் களத்தை நோக்கி புறப்பட்டுள்ளது.

udhayanidhi stalin dmk tamil nadu assembly election 2026

ஆம்! வரும் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தவும், திமுக ஆட்சி தொடரவும் துணை முதல்வரும் இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட திமுகவினரை உதயநிதி ஸ்டாலின் கவுரவிக்கிறார். எந்த மீட்டிங் சென்றாலும் உதயநிதி பேசுவது, "2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையையே வென்றுவிட்டோம். இது அரையிறுதி போட்டி. 2026 ஆம் ஆண்டு இறுதி போட்டியான தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் வெல்வோம்" என உதயநிதி பேசி வருகிறார்.

ஓரணியில் தமிழகம் எனும் திட்டமானது தமிழகம் முழுவதும் திமுக பக்கம் இருப்பது என்பதாகும். இதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டு வீடு வீடாக போய் உறுப்பினர் சேர்க்கும் நடவடிக்கைகள் செய்யப்பட்டன. இந்த திட்டத்திற்கு பல்வேறு இடங்களில் மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+