சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோசமான "பின்விளைவு" ஏற்படும்.. ரஷ்யா புடினுக்கு போனில் வார்னிங் தந்த பிடன்.. போர் மூளும் அபாயம்!

Google Oneindia Tamil News

சென்னை: உக்ரைன் பிரச்சனை தொடர்பாக நேற்று அமெரிக்க அதிபர் பிடன், ரஷ்ய அதிபர் புடின் இருவரும் போனில் உரையாடினார்கள்.

Recommended Video

    Putin-உடன் பேசிய Joe Biden.. மேலும் மோசமடையும் Ukraine விவகாரம்

    அமெரிக்கா ரஷ்யா இடையே உக்ரைனில் நடக்க போகும் proxy வார் அபாயம் அதிகரித்துள்ளது. அதாவது இரண்டு எதிர் நாடுகள் வேறு ஒரு நாட்டை காரணம் காட்டி, அந்த நாட்டில் மோதிக்கொள்வதுதான் proxy வார். ரஷ்யா - அமெரிக்கா பனிப்போரின் போது இப்படி நிறைய proxy வார் நடந்தது.

    இந்த முறை உக்ரைனை காரணம் காட்டி ரஷ்யா - அமெரிக்கா மோதி கொள்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் ஆவதை ரஷ்யா விரும்பவில்லை.

    CODE BLACK.. ஒரு வாரத்தில் உலக போரா? உக்ரைனை அவசரமாக காலி செய்த அமெரிக்கா.. தாக்க ரெடியானது ரஷ்யா CODE BLACK.. ஒரு வாரத்தில் உலக போரா? உக்ரைனை அவசரமாக காலி செய்த அமெரிக்கா.. தாக்க ரெடியானது ரஷ்யா

    நேட்டோ

    நேட்டோ

    முக்கியமாக முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோ படையுடன் இணைந்தது போல உக்ரைன் நேட்டோ படையுடன் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை. இதன் காரணமாக உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிடுகிறது. ஏற்கனவே உக்ரைனின் ஒரு பகுதியான க்ரீமியாவை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. இந்த நிலையில் முழு உக்ரைனையும் ரஷ்யா கட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டு இருக்கிறது.

     எப்போது வேண்டுமானாலும்

    எப்போது வேண்டுமானாலும்

    இதற்காக உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகளை குவித்து வருகிறது. உக்ரைனை சுற்றி அனைத்து பக்கங்களிலும் போர் விமானங்கள், ஏவுகணைகள், போர் கப்பல்கள் குவிக்கப்பட்டு உள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமான போர் வீரர்கள் ரஷ்யா மூலம் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம். இன்னும் ஒரு வாரத்தில் போர் நடக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

     போன் கால்

    போன் கால்

    இன்னும் ஒரு வாரத்தில் போர் நடந்தால் அது மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் பட்சத்தில், அது அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பெரிய போராக வெடிக்கும் அபாயம் உள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் பிடன் நேற்று போனில் பேசினார்.

    எந்த மாற்றமும் இல்லை

    எந்த மாற்றமும் இல்லை

    நேற்று இவர்கள் 1 மணி நேரம் போனில் பேசினார்கள். பல்வேறு முக்கிய விஷயங்களை இவர்கள் ஆலோசனை செய்தனர். போர் தொடுக்கும் எண்ணம் வேண்டாம். உக்ரைனை ஆக்கிரமிக்க நினைக்க வேண்டாம் என்று பிடன் கூறியதாக கூறப்படுகிறது. அதேபோல் அமெரிக்காவின் நேட்டோ படைகளை உக்ரைனில் குவிக்க வேண்டாம். உக்ரைனை நேட்டோவின் அங்கமாக்கும் எண்ணம் வேண்டாம் என்று புடின் குறிப்பிட்டதாக தெரிகிறது.

    தோல்வி

    தோல்வி

    இது தொடர்பாக ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நடந்த போன் கால் தோல்வியில் முடிந்துள்ளது. ரஷ்யாவின் கோரிக்கைகளை அமெரிக்க கேட்கவில்லை. நேட்டோ படைகளை விரிவாக்ககூடாது . நேட்டோ படைகளை உக்ரைனில் அமெரிக்கா குவிக்க கூடாது. நேட்டோ படையில் கூடுதல் நாடுகளை இணைக்கவும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இதை அமெரிக்கா கேட்கவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.

    பிடன் கோபம்

    பிடன் கோபம்

    இந்த போன் காலில் ரஷ்ய அதிபர் புடினிடம் அமெரிக்க அதிபர் பிடன் கோபமாக பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதில், உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணத்தை ரஷ்யா கைவிட வேண்டும். இல்லையென்றால் மிக மோசமான விளைவுகளை ரஷ்யா சந்திக்கும். ரஷ்யாவை உலக நாடுகள் தனிமைப்படுத்தும். ரஷ்யா மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

     ரஷ்யா எதிர்ப்பு

    ரஷ்யா எதிர்ப்பு

    உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க நினைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது. அமெரிக்க தனது நட்பு நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது கடுமையான ஆக்சன் எடுக்கும். இது ரஷ்யாவிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார். அதே சமயம் மற்ற விதமான நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த போன் கால் காரணம் உக்ரைன் போர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    English summary
    Ukraine - Russia - USA issue: What did Biden talk with Putin in the phone call for an hour?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X